ட்ரேடிங் முறையில் சிஎஸ்கே அணியில் ரோஹித் சர்மாவா? சலசலப்புகளுக்கு காசி விஸ்வாசனாதன் பதில்

Kasi Viswanathan
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்று முடிந்தது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை டிரேடிங் முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வாங்கிக் கொள்ளலாம் என்ற அனுமதியை ஐபிஎல் நிர்வாகம் கொடுத்திருந்தது. அதை பயன்படுத்திய மும்பை நிர்வாகம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை வாங்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன் நிற்காத மும்பை அணி 2024 ஐபிஎல் முதல் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக தங்களுடைய புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று அறிவித்தது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. ஏனெனில் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற ரோஹித் சர்மா குறுகிய காலத்திலேயே 5 கோப்பைகளை வென்று மும்பையை வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்துள்ளார்.

- Advertisement -

சென்னையில் ரோஹித்தா:
அப்படிப்பட்ட அவரை நன்றி மறந்து கழற்றி விட்ட மும்பை அணியை 6 லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் பாலோ செய்வதை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த நிலையில் விரைவில் தோனி ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவருக்கு பின் வழி நடத்த ரோகித் சர்மா சென்னை அணியில் விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதே போல தோனிக்கு நிகராக 5 கோப்பைகளை வென்ற அனுபவமும் தரமும் கொண்டிருப்பதால் பேசாமல் நீங்கள் எங்கள் அணிக்கு வந்து விடுங்கள் என்று சில சென்னை ரசிகர்களும் ரோகித் சர்மாவுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இதற்கிடையே 2024 ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஒரு வாரம் முன்பு வரை வீரர்களை டிரேடிங் முறையில் மாற்றிக் கொள்வதற்கான விண்டோ மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதில் மும்பை அணியில் விளையாடும் நட்சத்திர அனுபவ இந்திய வீரர் சென்னை அணிக்கு மாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அனலிஸ்ட் பிரசன்னா ஆகியோர் சமீபத்தில் யூடியூப் பக்கத்தில் பேசினார்கள். அந்த வகையில் ரோகித் சர்மாவை சென்னை அணி டிரேடிங் முறையில் வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சலசலப்புகள் காணப்படுகின்றன.

இதையும் படிங்க: இதான் உங்க திட்டமா? எப்படி கப் ஜெயிக்க முடியும்.. ஏலத்தில் சொதப்பிய ஆர்சிபி அணியின் தவறை விமர்சித்த கும்ப்ளே

இந்நிலையில் ட்ரேடிங் முறையில் தாங்கள் எந்த வீரரையும் வாங்கப் போவதில்லை என சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் வதந்திகளுக்கு க்ரிக்பஸ் நிலையத்தில் முற்றுப்புள்ளி வைத்து பேசியது பின்வருமாறு. “வீரர்களை டிரேடிங் செய்வதில்லை என்ற கொள்கையை நாங்கள் வைத்துள்ளோம். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டிரேடிங் செய்ய எங்களிடம் வீரர்கள் இல்லை. அதற்காக நாங்கள் மும்பையை அணுகவும் இல்லை. நாங்கள் அதை விரும்பவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement