இதான் உங்க திட்டமா? எப்படி கப் ஜெயிக்க முடியும்.. ஏலத்தில் சொதப்பிய ஆர்சிபி அணியின் தவறை விமர்சித்த கும்ப்ளே

Anil Kumble 2
- Advertisement -

டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் 2024 டி20 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி முடித்துள்ளன. அதில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்வதற்காக காலம் காலமாக போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சில வெளிநாட்டு வீரர்களை பெரிய தொகைகள் கொடுத்து வாங்கியது.

சொல்லப்போனால் வணிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஸ் ஹேசல்வுட் ஆகிய 3 தரமான பவுலர்களை பெங்களூரு நிர்வாகம் ஏலத்திற்கு முன்பாகவே விடுவித்தது ஆச்சரியமாக இருந்தது. எனவே அவர்களுடைய இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அந்த அணி நிர்வாகம் இந்த ஏலத்தில் அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், டாம் கரண் ஆகிய 3 வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை வாங்கியது.

- Advertisement -

அனில் கும்ப்ளே அதிருப்தி:
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை விளையாடாத இந்திய பவுலரான யாஷ் தயாளை வாங்கிய அந்த அணி மேற்கொண்டு 2 உள்ளூர் இந்திய வீரர்களை அடிப்படை விலைக்கு வாங்கியது. ஆனால் ஏற்கனவே கழற்றி விட்ட இலங்கையின் தரமான ஸ்பின்னரான ஹஸரங்காவுக்கு பதிலாக சரியான மாற்று ஸ்பின்னரை இந்த ஏலத்தில் பெங்களூரு நிர்வாகம் வாங்கவில்லை என்று சொல்லலாம்.

மேலும் டாம் கரண் கடந்த ஐபிஎல் தொடர்களில் ரன்களை வாரி வழங்கிய நிலையில் யாஷ் தயாள் 2023 சீசனில் ரிங்கு சிங்கிடம் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் வழங்கியதை மறக்க முடியாது. இந்நிலையில் 2024 ஏலத்தில் கோப்பையை வெல்லும் அளவுக்கு பெங்களூரு அணி நிர்வாகம் தேவையான தரமான வீரர்களை வாங்கவில்லை என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஏலத்தில் வாங்கிய வீரர்களை விட பெங்களூரு விடுவித்த வீரர்கள் தரமானவர்களாக இருந்தனர். அவர்கள் விடுவித்த ஹஸரங்கா, ஹேசல்வுட், ஹர்ஷல் படேல் ஆகியோரை விட இந்த ஏலத்தில் சிறந்த பவுலர்களை வாங்கினார்களா? என்பது கேள்வியாகும். அதை விட இப்போதும் அவர்களிடம் தரமான ஸ்பின்னர் இல்லை”

இதையும் படிங்க: இது தான் கலியுகமா? தோனி, ரோஹித் விஸ்வாசத்துக்கு மதிப்பே இல்லை.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

“எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விக்கெட்களை எடுக்கக்கூடிய ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அப்படிப்பட்ட ஸ்பின்னர் அவர்களிடம் இல்லை. இப்போது அணியில் உள்ள கரன் சர்மா கடந்த சீசனில் பெரிய அளவில் விளையாடவில்லை. கடந்த வருடம் இம்பேக்ட் வீரராக விளையாடிய அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை. இதற்கிடையே அவர்கள் சில வீரர்களை டிரேடிங் முறையில் கழற்றி விட்டனர். எனவே ஸ்பின்னர் இல்லாமல் அவர்களால் சாதிக்க முடியாது. அவர்கள் இந்த ஏலத்தில் சரியான முடிவை எடுத்தார்கள் என்று நான் கருதவில்லை” எனக் கூறினார்.

Advertisement