இது தான் கலியுகமா? தோனி, ரோஹித் விஸ்வாசத்துக்கு மதிப்பே இல்லை.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

Aakash Chopra 2
- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்காக வென்ற கேப்டன் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார். அதனால் ஐபிஎல் வரலாற்றில் 20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் மற்றும் அதிக தொகைக்கு விலை போன வீரர் ஆகிய 2 சாதனைகளை அவர் படைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆனால் அடுத்த 2 மணி நேரத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க்கை 24.75 கோடிகள் என்ற பிரம்மாண்ட தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. அதனால் ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற கமின்ஸ் சாதனையை முறியடித்த அவர் புதிய வரலாறு படைத்தார்.

- Advertisement -

விஸ்வாசம் எங்கே:
இந்நிலையில் எம்எஸ் தோனி, விராட் கோலி, பும்ரா போன்ற நட்சத்திர இந்திய வீரர்கள் 15 கோடிக்கும் குறைவான தொகையில் விளையாடி வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இவ்வளவு கோடிகள் கொடுக்கப்பட்டது சரியல்ல என்று ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக காலம் காலமாக தங்களுடைய அணிக்காக விளையாடி வரும் தோனி, பும்ரா, விராட் கோலி போன்றவர்களின் விஸ்வாசம் மதிக்கப்படவில்லை என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடி, பட் கமின்ஸ் 20.50 கோடி. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா 12, எம்எஸ் தோனியும் 12 கோடி, விராட் கோலி 15 கோடி, ரோகித் சர்மா 16 கோடிகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுகின்றனர். மறுபுறம் மிட்சேல் ஸ்டார்க், சாம் கரண், கேமரூன் கிரீன் ஆகியோர் அவர்களை விட அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளனர். இது தான் கலியுகமா? தற்சமயத்தில் உங்களுடைய நம்பர் ஒன் டி20 பவுலராக பும்ரா இருக்கிறார்”

- Advertisement -

“ஆனால் பும்ரா வெறும் 12 கோடி மட்டுமே பெறும் நிலையில் ஸ்டார்க் 25 கோடிகளை பெறுவது தவறாகும். இங்கே யாருடைய பணத்தையும் பற்றி நான் தவறாக பேசவில்லை. அனைவரும் தங்களால் முடிந்தளவுக்கு பணத்தை சம்பாதிப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் தங்களுடைய அணிக்காக விஸ்வாசமாக விளையாடி வரும் விராட் கோலி மற்றும் ஆகியோர் இந்த ஏலத்தில் பங்கேற்றிருந்தால் கண்டிப்பாக 35 கோடிகளுக்கு வாங்கப்பட்டிருப்பார்கள்”

இதையும் படிங்க: இதுக்கு மேல உங்களுக்கு எவ்ளோ சான்ஸ் வேணும்? தேடி போய் அவுட்டாகுறீங்களே.. இந்திய வீரரை விமர்சித்த சைமன் டௌல்

“எனவே ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் 200 கோடிகளை வைத்திருந்தால் அதில் 150 கோடிகளை இந்திய வீரர்களுக்காகவும் 50 கோடிகளை வெளிநாட்டு வீரர்களுக்காகவும் ஒதுக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல சமீப வருடங்களாக நாட்டுக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்து வந்த ஸ்டார்க், கமின்ஸ் போன்ற வீரர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்படுவது அதிகம் என்றால் மிகையாகாது.

Advertisement