இதுக்கு மேல உங்களுக்கு எவ்ளோ சான்ஸ் வேணும்? தேடி போய் அவுட்டாகுறீங்களே.. இந்திய வீரரை விமர்சித்த சைமன் டௌல்

Simon Doull
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் அதே 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 212 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 62, கேப்டன் கேஎல் ராகுல் 56 ரன்கள் எடுக்க தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த தென்னாப்பிரிக்காவை துவக்க வீரர்கள் டோனி டீ ஜோர்சி 119*, ரீசா ஹென்றிக்ஸ் 52 ரன்கள் அடித்து மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

எவ்ளோ சான்ஸ் வேணும்:
அதனால் இத்தொடரை வெல்ல கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் அவுட்டான போது 114/3 என்ற ஓரளவு நல்ல நிலையில் இருந்த இந்தியாவை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 12 (23) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

சாதாரணமாகவே பல வருடங்களாக தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடி வரும் அவர் இப்படி கிடைக்கும் வாய்ப்புகளையும் வீணடித்து வருவது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவுட்டாக கூடாத சமயத்தில் அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ள சஞ்சு சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் அவருக்கு தொடர்ச்சியாக பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சஞ்சு சாம்சன் வழக்கம் போல அவுட்டானார். அவுட்டாக கூடாத சமயத்தில் அவர் அவுட்டாவார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தன்னுடைய உடம்பிலிருந்து வெளியே அடிப்பதில் அவர் அடிக்கடி தடுமாறி வருகிறார். இந்திய மைதானங்களில் பந்து பெரிய அளவில் எதுவும் செய்யாது என்பதால் நீங்கள் உடம்புக்கு வெளியே விளையாடுவதை ஏற்றுக்கொள்ளலாம்”

இதையும் படிங்க: அப்போ தோனி, கோலி, பும்ரா ஏமாளியா? இந்த ரூல்ஸை மாத்துங்க.. ஐபிஎல் நிர்வாகத்தை விளாசிய ரெய்னா

“ஆனால் இங்கே 45 டிகிரி வெளியே சென்று அடிக்கும் இது போன்ற ஷாட்டுகள் ஆபத்தானது. அவருடைய பேட் நேராக வரவில்லை. சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடும் போது விரும்புபவர்கள் ஏராளமாக உள்ளனர். நன்றாக விளையாடும் போது அவரை விட பார்ப்பதற்கு நிறைய சிறந்த வீரர்கள் இருக்க முடியாது. ஆனால் நீல நிற ஜெஸ்ஸியில் தம்முடைய அனைத்து திறமையும் ஒன்றாக போடுவதே அவரிடம் உள்ள பிரச்சினையாகும்” என்று கூறினார்.

Advertisement