RCB vs CSK : தெறிக்க விட்ட டு பிளேஸிஸ் – மேக்ஸ்வெல், ஆனாலும் ஆர்சிபி’யின் போராட்ட வெற்றியை சென்னை பறித்தது எப்படி

CSK vs RCB
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 24வது லீக் போட்டிகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு ருதுராஜ் 3 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய அஜிங்க்ய ரகானே டேவோன் கான்வேயுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 37 (20) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் களமிறங்கிய சிவம் துபேவுடன் 3வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய டேவோன் கான்வே சதத்தை நெருங்கிய போதிலும் 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 83 (44) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் சிவம் துபேவும் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 52 (27) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த ராயுடு அதிரடியாக விளையாட முயற்சித்து 14 (6) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

போராட்ட வெற்றி:
இறுதியில் மொய்ன் அலி 2 சிக்ஸருடன் 19* (9) ரன்களும் ஜடேஜா 10 (8) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் 226/6 ரன்கள் குவித்த சென்னை பெங்களூருவுக்கு எதிராக தன்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து 227 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு ஆகாஷ் சிங் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி 6 (4) ரன்களில் கிளீன் போல்ட்டாக அடுத்து வந்த மஹிபால் லோம்ரர் டக் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 15/2 என்ற தடுமாற்ற துவக்கத்தை பெற்ற பெங்களூருவுக்கு அடுத்து களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்தார்.

அவருடன் மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் தனது பங்கிற்கு மிரட்டலாக பேட்டிங் செய்து சென்னை பவுலர்களை பந்தாடினார். 3வது ஓவரில் சேர்ந்து அதே வேகத்தில் 13 ஓவர்கள் வரை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னை ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தனர். ஆனால் அப்போது 3 பவுண்டரி 86 சிக்ஸருடன் 76 (36) ரன்களை குவித்து அச்சுறுத்தலை கொடுத்த மேக்ஸ்வெல் ஒருவழியாக தீக்சனா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே கேப்டன் டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 62 (33) ரன்களில் மொய்ன் அலி சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அப்போது கடைசி 5 ஓவரில் பெங்களூருவின் வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்பட்ட போது களமிங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு 28 (14) ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதனால் கடைசி 3 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்ட போது எதிர்புறம் நம்பிக்கை கொடுத்த சபாஷ் அஹமதை 12 (10) ரன்களில் அவுட்டாக்கிய பதிரனா 0, 0, 1, ஒய்ட், 1, 1 என மேற்கொண்டு 4 ரன்கள் மட்டுமே வழங்கி அசத்தினார்.

போதாகுறைக்கு 19வது ஓவரில் வேன் பர்ணலை 2 (5) ரன்களில் அவுட்டானதால் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட போது பிரபுதேசாயும் 19 (11) ரன்கள் எடுத்துப் போராடி அவுட்டானார். அதனால் 20 ஓவர்களில் பெங்களூரு 218/8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக இளம் பவுலர்கள் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளும் பதிரனா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

- Advertisement -

அதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை 4 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைந்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் என்ன தான் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச் இருந்தாலும் பந்து வீச்சில் சிராஜ் தவிர்த்து ஹர்ஷல் படேல் உள்ளிட்ட ஏனைய அனைத்து பெங்களூரு பவுலர்களும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கி பின்னடைவை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க:RCB vs CSK : தெறிக்க விட்ட டு பிளேஸிஸ் – மேக்ஸ்வெல், ஆர்சிபி’யின் போராட்ட வெற்றியை சென்னை பறித்தது எப்படி

அதை விட 227 என்ற கடினமான இலக்கை துரத்தும் போது குறைந்தபட்சம் 50 ரன்கள் அடித்துக் கொடுக்க வேண்டிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் ஓவரிலேயே அவுட்டானது வெற்றியை ஆரம்பத்திலேயே பாதி உடைத்தது. இருப்பினும் டு பிளேஸிஸ் – மேக்ஸ்வெல் ஆகியோர் போராடி கொண்டு வந்த வெற்றியை சில கேட்ஸ்களை தவற விட்டாலும் டெத் ஓவர்களில் அபாரமாக செயல்பட்ட சென்னை தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களை ஃபினிஷிங் செய்ய விடாமல் கச்சிதமாக செயல்பட்டு தன்வசமாக்கியது.

Advertisement