RCB vs CSK : நோ பால் போட்டதற்கு ஹர்ஷல் படேல் தடை பெற்றது எப்படி? ஆர்சிபி’யை பந்தாடிய சென்னை – புதிய சாதனை ஸ்கோர்

RCB vs CSK
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் தன்னுடைய கடந்த போட்டியில் கடைசி பந்தில் தோல்வியை சந்தித்த சென்னை வெற்றி பாதைக்கு வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கைக்வாட் ஆரம்பத்திலேயே தடுமாறி 3 (6) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய சென்னையின் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரம் அஜிங்க்ய ரகானே களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியை துவக்கி பவர் பிளே ஓவர்களில் விரைவாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வேயுடன் இணைந்து பெங்களூரு பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அவர் 2வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 37 (20) ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த நிலைமையில் களமிறங்கிய சிவம் துபே பேட்டிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் சரவெடியாக பேட்டிங்கை வெளிப்படுத்தி பிரம்மாண்ட சிக்ஸ்ர்களை பறக்க விட்டார். குறிப்பாக 101, 103, 111 என ஒவ்வொரு சிக்ஸரையும் முந்தைய சிக்ஸரை விட அதிக தூரத்தில் பறக்க விட்ட அவருடன் மறுபுறம் அதிரடியாக செயல்பட்டு அரை சதமடித்த டேவோன் கான்வே 3வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை நெருங்கிய போது 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 83 (45) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

அடுத்த சில ஓவர்களிலேயே சிவம் துபேவும் அரை சதமடித்து 2 பவுண்டரி 5 சிக்சருடன் 52 (27) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய அதிரடியாக விளையாட முயற்சித்த அம்பத்தி ராயுடு தனது பங்கிற்கு 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14 (6) ரன்களில் நடையை கட்டினார். இறுதியில் மொய்ன் அலி அதிரடி காட்டிய நிலையில் கடைசி ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் 2வது பந்தில் யார்கர் முயற்சித்து இடுப்புக்கு மேலே நோ பால் போட்டார். அந்தப் பந்தை மீண்டும் ஒயிட் வீசிய அவர் அதற்கு தண்டனையாக மீண்டும் வீசிய பந்தை மீண்டும் இடுப்புக்கு மேலே நோ பாலாக வீசினார்.

- Advertisement -

அப்படி ஒரே ஓவரில் 2 அடுத்தடுத்த இடுப்புக்கு மேல் நோ பால் பந்துகளை வீசியதால் அடிப்படை விதிமுறைப்படி அதற்கு மேல் பந்து வீச அனுமதிக்காமல் அவரை அம்பயர்கள் தடுத்து தடை செய்தனர். அதனால் கிளன் மேக்ஸ்வெல் வீசிய எஞ்சிய ஓவரில் 3வது பந்தில் சிக்ஸர் அடித்த ஜடேஜா 4வது பந்தில் 10 (8) ரன்களுடன் அவுட்டானார். அந்த நிலைமையில் சேப்பாக்கத்துக்கு நிகராக பெங்களூரு ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் களமிறங்கிய தோனி சிங்கிள் மட்டுமே எடுத்த போதிலும் மறுபுறம் மொயின் அலி 2 சிக்ஸருடன் 19* (9) ரன்கள் எடுத்ததால் சென்னை 20 ஓவர்களில் 226/6 ரன்கள் எடுத்தது.

இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிராக சென்னை தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2022 சீசனில் டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிவம் துபே 95* (46) ரன்கள் குவித்த அதிரடியில் பெங்களூருவுக்கு எதிராக 216/4 ரன்கள் எடுத்து வென்றதே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க:வீடியோ : இந்த வருசத்துடன் ரிட்டையர் ஆகுறீங்களா? செய்தியாளரின் கேள்விக்கு தோனி கொடுத்த நேரடி பதில் இதோ

இருப்பினும் பொதுவாகவே தொட்டாலே சிக்சர்கள் பறக்கக்கூடிய அளவில் சிறிய பவுண்டரிகளை கொண்ட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் எப்போதும் போலவே இந்த போட்டியிலும் பிட்ச் ஃபிளாட்டாக இருந்ததை பயன்படுத்தி டாஸ் தோற்றாலும் முதலில் பேட்டிங் செய்த சென்னை அதிரடியாக செயல்பட்டு நல்ல ஸ்கோரை எடுத்துள்ளது. ஆனாலும் இந்த மைதானத்தில் 250 ரன்கள் அடித்தாலும் அதை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி காண முடியும் என்பதை நன்கு தெரிந்த சென்னை அதைக் கச்சிதமாக செய்யும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

Advertisement