தெ.ஆ டி20 தொடரின் சிஎஸ்கேவின் கிளை அறிமுகம் – கால் பதித்த 6 ஐபிஎல் அணிகள் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

CSK-1
- Advertisement -

ரசிகர்களை கவர்வதற்காக கடந்த 2005இல் துவங்கப்பட்ட டி20 போட்டிகள் கடந்த 2007இல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானை கடைசி ஓவரின் கடைசி பந்தில் த்ரில் வெற்றியுடன் இந்தியா முத்தமிட்டதால் மிகவும் பிரபலமடைந்தது. அதை பார்த்து கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் ஓவருக்கு ஓவர் அனல் பறக்கும் தருணங்களை விருந்தாக்கி ரசிகர்கள் எதிர்பாராத த்ரில்லர் திருப்பங்களை முடிவாக கொடுத்து அதையும் மிஞ்சியது. அந்த வகையில் கடந்த 15 வருடங்களில் பல பரிமாணங்களையும் கண்டுள்ள ஐபிஎல் இன்று ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை விட தரமான அதே சமயம் பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதனால் 10 அணிகளுடன் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக விரிவடைந்துள்ள நிலையில் வரும் 2025 முதல் 84, 94 போட்டிகளாக மேலும் விரிவடைய உள்ளது. ஐபிஎல் தொடரின் வெற்றியை பார்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட இதர வெளிநாட்டு வாரியங்கள் தங்களது நாட்டில் ஆளாளுக்கு பிரீமியர் லீக் டி20 தொடரில் நடத்தினாலும் ஐபிஎல் உச்சத்தை எட்ட முடியவில்லை. அந்த வரிசையில் மசான்சி சூப்பர் லீக் என்ற பெயரில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் நடத்தி வந்த டி20 தொடர் தோல்வியில் முடிந்து கடந்த வருடம் மொத்தமாக நிறுத்தப்பட்டது.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க டி20:
இருப்பினும் மனம் தளராத அந்நாட்டு வாரியம் “டி20 சேலஞ்ச்” என்ற பெயரில் மீண்டும் ஒரு புதிய கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 2023 ஜனவரி மாதம் நடைபெறும் அந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கும் என அறிவித்த அந்நாட்டு வாரியம் அதை வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. அதில் ஐபிஎல் தொடரில் ஏற்கனவே அணிகளை வாங்கியுள்ள உரிமையாளர்கள் பிஎஸ்எல் தொடரில் அணிகளை நிர்வாகிக்கும் உரிமையாளர்கள் உட்பட 29 நிர்வாகங்கள் பங்கேற்றன. இறுதியில் ஏற்கனவே உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக உருவெடுத்துள்ள ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் இதர நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி 6 அணிகளையும் மொத்தமாக வாங்கியுள்ளதாக தென் ஆப்பிரிக்கா வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதை இந்த டி20 தொடரின் கமிஷனராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் கிரேம் ஸ்மித் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “ஜனவரி – பிப்ரவரி 2023 மாதங்களில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க லீக் தொடரில் அணிகளை வாங்கியுள்ள உரிமையாளர்களை வரவேற்கிறோம். உலக அரங்கில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்டை வலுப்படுத்தும் வகையில் ஆர்வம் காட்டியுள்ள அவர்களால் இது சுவாரசியமான நேரமாக உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஜோகன்னஸ்பர்க் – சென்னை:
அந்த அறிவிப்பின் படி ஐபிஎல் தொடரில் 4 கோப்பையை வென்றுள்ள எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியின் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் ஜோகனஸ்பர்க் அணியை வாங்கியுள்ளது. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அங்குள்ள வான்ட்ரஸ் மைதானத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா உலக கோப்பையை வென்றது.

அத்துடன் 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை இதே மைதானத்தில்தான் வென்றது. அந்த வகையில் இந்த மைதானத்திற்கும் தோனிக்கும் சென்னைக்கும் வரலாற்றில் நிறைய தொடர்பு இருப்பதால் அந்த அணியை சென்னை நிர்வாகம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தெரிகிறது. அத்துடன் அந்த அணிக்கு “ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

6 அணிகள்:
இத்துடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இந்த தொடரில் கேப் டவுன் நகரை மையமாக கொண்டுள்ள அணியை வாங்கியுள்ளது. அதனால் அங்குள்ள நியூலேன்ட்ஸ் மைதானம் அந்த அணியின் சொந்த மைதானமாகியுள்ளது. அதேபோல் கிப்ரியா நகரை மையப்படுத்தி அணியை தமிழகத்தின் சன் டிவி குழுமம் ஏற்கனவே நிர்வகிக்கும் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. அங்குள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானம் அந்த அணியின் சொந்த மைதானமாகியுள்ளது.

டர்பன் நகரைச் சேர்ந்த அணியை இந்த வருடம் புதிதாக லக்னோ ஐபிஎல் அணியை வாங்கிய சஞ்சீவ் கோனேகா நிறுவனம் வாங்கியுள்ளது. அங்குள்ள கிங்ஸ்மீட் மைதானம் அந்த அணியின் சொந்த மைதானமாகியுள்ளது. மேலும் பார்ல் நகரை மையப்படுத்திய அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளதால் அங்குள்ள போலண்ட் பார்க் அந்த அணியின் சொந்த மைதானமாகியுள்ளது.

இதையும் படிங்க : IND vs ENG : இங்கிலாந்து தொடரிற்கு பின்னர் 2 இந்திய வீரர்களை ஸ்பெஷலாக பாராட்டி – சச்சின் டெண்டுல்கர் இட்ட பதிவு

அதேபோல் ப்ரிட்டோரியா நகரை மையப்படுத்திய அணியை டெல்லி அணி நிர்வாகம் வாங்கியுள்ள நிலையில் அங்குள்ள சூப்பர் ஸ்போர்ட்ஸ் மைதானம் அந்த அணியின் சொந்த மைதானமாக மாறியுள்ளது.

Advertisement