IND vs ENG : இங்கிலாந்து தொடரிற்கு பின்னர் 2 இந்திய வீரர்களை ஸ்பெஷலாக பாராட்டி – சச்சின் டெண்டுல்கர் இட்ட பதிவு

Sachin-and-IND-Team
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் இருந்ததால் கடைசியாக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 260 ரன்கள் என்ற இலக்கினை இந்திய அணி வெற்றிகரமாக துரத்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த மூன்றாவது மிக முக்கியமான போட்டியில் இந்திய அணி சவாலான இலக்கினை துரத்தும் போது 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்ததால் இந்த 260 ரன்கள் எப்படி துரத்த போகிறது என்று கேள்வி எழுந்தது.

அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் மற்றும் ஆல்ரவுண்டர் பாண்டியா ஆகியோரது ஜோடி அற்புதமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வேளையில் பாண்டியா 71 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

ஆனால் இறுதிவரை களத்தில் நின்ற ரிஷப் பண்ட் 113 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 125 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த அருமையான ஆட்டத்திற்கு பின்னர் ரிஷப் பண்ட்டிற்கு ஆட்டநாயகன் விருதும், ஹார்டிக் பாண்டியாவிற்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் இவர்கள் இருவரது ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்ட வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் இவர்கள் இருவரின் ஆட்டம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மனம் திறந்த பாராட்டினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : இந்திய அணி இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றியதற்கு எனது வாழ்த்துக்கள். இந்த நல்ல ஆட்டத்தை இனியும் தொடர வேண்டும் என்று இந்திய அணியை வாழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்கள் பெட்ரோல் போட்டு ஓடும் கார்கள் கிடையாது – கிரிக்கெட் வாரியத்துக்கு பென் ஸ்டோக்ஸ் சவுக்கடி

அதனை தொடர்ந்து குறிப்பிட்ட இரண்டு வீரர்களை ஸ்பெஷலாக வாழ்த்திய சச்சின் ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரது ஆட்டம் அற்புதமாக இருந்தது என அவர்கள் இருவரது புகைப்படத்தையும் பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement