TNPL 2023 : ஆரம்பத்திலேயே டாப்பராக மிரட்டும் நடப்பு சாம்பியன் சேப்பாக்- திருப்பூரை அசால்ட்டாக ஊதி தள்ளியது எப்படி?

TNPL Baba Aparajith
- Advertisement -

தமிழகத்தில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற 4வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த திருப்பூர் வெற்றி பாதைக்கு திரும்ப நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய அந்த அணிக்கு துஷார் ரஹிஜா 2 (6) சதுர்வேத் 8 (13) விஷால் வைத்யா 7 (14) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதனால் 24/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் செயல்பட்ட ராதாகிருஷ்ணன் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போதிலும் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (31) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய விஜய் சங்கரும் 1 சிக்சருடன் 28 (28) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் சேப்பாக்கத்தின் தரமான பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் இறுதியில் ராஜேந்திரன் விவேக் மட்டும் 2 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 26* (18) ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார்.

- Advertisement -

டேபுள் டாப்பர்:
அதனால் 20 ஓவர்களில் திருப்பூர் வெறும் 120/7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மறுபுறம் அந்தளவுக்கு ஆரம்பம் முதலே பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு நெருக்கடி கொடுத்த சேப்பாக்கம் சார்பில் அதிகபட்சமாக ரஹீல் மற்றும் ஹரிஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 121 என்ற சுலபமான இலக்கை துரத்திய சேப்பாக்கத்துக்கு நட்சத்திர வீரர் நாராயண ஜெகதீசன் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 13 (9) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய பிரதோஷ் பால் 5 பவுண்டரியுடன் 25 (25) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அவர்களை தொடர்ந்து வந்து அதிரடியாக செயல்பட்ட சஞ்சய் யாதவ் தமது ஸ்டைலில் 2 பவுண்டரி 1 சிக்சரை அடித்து 22 (18) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட நட்சத்திர வீரர் பாபா அபாரஜித் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 46* (29) ரன்களும் ஹரிஷ் குமார் 12* (13) ரன்களும் எடுத்ததால் 15.4 ஓவரிலேயே 121/3 ரன்கள் எடுத்த சேப்பாக்கம் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

- Advertisement -

மறுபுறம் சவாலான பிட்ச்சில் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய திருப்பூர் அணிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக அஜித் ராம் 2 விக்கெட்டுகள் எடுத்து போராடியும் வெற்றி காண முடியவில்லை. இந்த வெற்றிக்கு 2 விக்கெட்டுகளும் 12* ரன்களும் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய ஹரிஷ் குமார் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அத்துடன் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்த நடப்புச் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரம்பத்திலேயே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. அதனால் 4 கோப்பைகளை வென்றது போலவே இம்முறையும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணி கோப்பையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு சேப்பாக்கம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உள்ளூரில் கடுமையா உழைச்ச அவர் தான் 3 வகையான அணியிலும் ஓப்பனிங் ஆடனும் – இளம் வீரருக்கு கம்பீர் மெகா ஆதரவு

ஆனால் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் சுமாராக செயல்பட்ட திருப்பூர் அடுத்தடுத்த தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement