TNPL 2023 : சேப்பாக் கில்லிடா, குறைந்த இலக்கை வைத்தே – பரிதாப திருச்சியை சுருட்டி வீசி வாழ்வா சாவா போட்டியில் வென்றது எப்படி

TNPL 2024
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 2ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு திருநெல்வேலியில் இருக்கும் இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெற்ற 24வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திருச்சி ஆகிய அணிகள் மோதின. அதில் ஏற்கனவே திருச்சி ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய வாழ்வா – சாவா சூழ்நிலையில் சேப்பாக் விளையாடியது.

அதில் டாஸ் வென்ற திருச்சி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக் அணிக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய மதன்குமார் 5 (8) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த சந்தோஷ் சிவ் 16 (13) ரன்களில் பெவிலியன் திரும்பினார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த கேப்டன் பாபா அபாரஜித் 10 (7) ரன்களிலும் ஜிதேஷ் குமார் 13 (9) ரன்களிலும் பெவிலியன் சென்றனர்.

- Advertisement -

சேப்பாக் கில்லிடா:
அதனால் 52/4 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஓவர்களில் சஞ்சய் யாதவ் 20 (23) ஹரிஷ் குமார் 2 (9) என முக்கிய பேட்ஸ்மேன்கள் தடுமாறி சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் சிபி 2 பவுண்டரியுடன் 31 (28) ரன்களும் சசிதேவ் 25* (24) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். அதன் காரணமாக ஓரளவு தப்பிய சேப்பாக் 20 ஓவர்களில் 129/7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் திருச்சி சார்பில் அதிகபட்சமாக கங்கா ஸ்ரீதர் ராஜு 3 விக்கெட்டுகளும் ஈஸ்வரன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 130 என்ற சுலபமான இலக்கை துரத்திய திருச்சிக்கு ஹரிஷ் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சரண் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்ற மற்றொரு தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு 7 (11) ரன்களில் அபாரஜித் பந்தில் ஆட்டமிந்தார். அந்த நிலைமையில் வந்த ஆண்டனி தாஸ் டக் அவுட்டாகி ஏமாற்ற கே ராஜ்குமார் 9 (13) ஆர் ராஜ்குமார் 1 (3) என முக்கிய மடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக செயல்பட்ட டார்ல் பெராரியோ வெற்றிக்கு போராடிய போதிலும் எதிர்ப்புறம் வந்த எஸ்பி வினோத் 1 (3) ரன்னில் நடையை கட்டினார். அதனால் 60/6 என தடுமாறிய அந்த அணிக்கு 13வது ஓவரை வீசிய எம் சிலம்பரசன் 2வது பந்தில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 45 (30) ரன்கள் குவித்து சவாலை கொடுத்துக் கொண்டிருந்த பெராரியோவை 45 (30) ரன்களில் அவுட்டாக்கி 4வது பந்தில் அடுத்ததாக வந்த ஆர் சிலம்பரசனை டக் அவுட்டாகி கடைசி பந்தில் ஈஸ்வரனையும் சில்வர் டக் அவுட்டாக்கி திருச்சியின் கதையை மொத்தமாக முடித்தார்.

அதன் காரணமாக 13.4 ஓவர்களிலேயே திருச்சியை வெறும் 71 ரன்களுக்கு சுருட்டிய சேப்பாக்கம் சார்பில் அதிகபட்சமாக எம் சிலம்பரசன் 5 விக்கெட்டுகளையும் சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளையும் ஹரிஷ் குமார், கேப்டன் பாபா அபாரஜித், ரஹீல் ஷா தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர். குறிப்பாக முதலில் பேட்டிங் செய்யும் போதே பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை உணர்ந்த சேப்பாக்கம் அணி பந்து வீச்சில் தங்களை நடப்பு சாம்பியன் என்பதை நிரூபிக்கும் அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்டு 58 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்தது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய எம் சிலம்பரசன் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் கில்லிடா என்ற வகையில் செயல்பட்ட நடப்பு சாம்பியன் சேப்பாக் லீக் சுற்றின் முடிவில் 7 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க:கொஞ்சம் பொறுப்போட பேசுங்க. இப்படியெல்லாம் நீங்க பேசலாமா? கெவின் பீட்டர்சனுக்கு – பதிலடி கொடுத்த நாதன் லயன்

ஆனாலும் ஜூலை 4இல் மதுரையை ஏற்கனவே வெளியேறிய திருப்பூர் தோற்கடித்தால் தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைமையில் அந்த அணி உள்ளது. மறுபுறம் பங்கேற்ற 6 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்த திருச்சி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பரிதாபமாக பிடித்துள்ளது.

Advertisement