கொஞ்சம் பொறுப்போட பேசுங்க. இப்படியெல்லாம் நீங்க பேசலாமா? கெவின் பீட்டர்சனுக்கு – பதிலடி கொடுத்த நாதன் லயன்

Pietersen-and-Lyon
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே பர்மிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூன் 28-ஆம் தேதி துவங்கி இன்றுடன் முடிவுக்கு வந்தது.

Nathan Lyon 2

- Advertisement -

இந்த போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் பீல்டிங் செய்யும் போது ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறிய நாதன் லையன் நான்காம் நாள் ஆட்டத்தின் போது காலில் கட்டுப்போட்டு ஊன்றுகோல் உதவியுடன் மைதானத்திற்கு வந்திருந்தார்.

எனவே இரண்டாவது இன்னிங்சில் அவர் களத்திற்கு வரமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆஸ்திரேலியா அணிக்கு தேவையான நேரத்தில் இறுதி கட்டத்தில் அந்த காயத்துடன் களத்திற்கு வந்து அவர் போராடியது அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது.

Lyon

இந்நிலையில் நாதன் லயனின் இந்த செயல் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான பீட்டர்சன் : நாதன் லையன் பேட்டிங் செய்யும்போது தலையில் பந்து பட்டிருந்தால் அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை இறக்கலாம் என்று ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று விமர்சித்து இருந்தார். அவரது இந்த கருத்திற்கு ரசிகர்கள் பலரும் கடும் கண்டனங்களை அளித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து அவரது இந்த கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ள நாதன் லையன் கூறுகையில் : நான் பேட்டிங் செய்ய வந்ததே தலையில் பந்து படுவதற்கு தான் என்று பீட்டர்சன் பேசியிருக்கிறார். அதை என்னால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் பந்து தலையில் பட்டால் அதன் மூலம் நாங்கள் மாற்று வீரரை களம் இறக்கலாம் என்று எண்ணியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : Ashes 2023 : வெறியுடன் போராடிய பென் ஸ்டோக்ஸ், மீண்டும் மிரட்டிய ஆஸி – சொந்த மண்ணில் இங்கிலாந்து அவமானத்தை சந்தித்தது எப்படி

அவரது இந்த பேச்சு தவறான ஒன்று. ஏனென்றால் ஏற்கனவே நான் களத்தில் பந்து பட்டு என்னுடைய உயிர் நண்பனை (பிலிப் ஹுகஸ்) இழந்தேன். எனவே இப்படி பேசுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கருத்தினை தெரிவிக்கும் முன்னர் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நாதன் லையன் தெரிவித்துள்ளார்.

Advertisement