முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சித்து. இவர் கிரிக்கெடிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் குதித்தார். தற்போது இவர் பஞ்சாப் மாநில அமைச்சராகவும் உள்ளார்.
இவர்மீது கடந்த 1988 ம் ஆண்டு ஒரு முதியவரை கொன்ற வழக்கு நிலுவையில் இருந்தது. சித்து 1988ம் ஆண்டு குர்னாம் சிங் என்கிற முதியோருடன் ஏற்பட்ட மோதல் முற்றியபோது கடுமையாக தாக்கியதில் குர்னாம்சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டு அரியானா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 18ஆண்டுகள் வழக்கு நடந்தநிலையில் கடந்த 2006ம் ஆண்டு சித்து குற்றவாளி என தீர்ப்பளித்து 3ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.ஆனால் சித்துவின் வழக்கறிஞர்கள் தரப்பு மேல்முறையீடு செய்து அந்த முதியவர் மாரடைப்பால் தான் இறந்தார், இவர் தாக்கி இறக்கவில்லை என்று வாதிட்டு சிறை தண்டானை மீது தடைஉத்தரவு பெற்றது.
இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் சித்து குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது. 30ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் மீண்டும் சித்துவிற்கு 3ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.இதன்காரணமாக தான் கொலை வழக்கில் சிறைக்கு செல்லவுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சித்து.