கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? ஆஸி வாரியத்தின் உ.கோ கனவு அணியை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

IND vs AUS
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 45 போட்டிகள் கொண்ட லீக் சுற்று பரபரப்பான தருணங்களுடன் நிறைவு பெற்றுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 9 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்று சொந்த மண்ணில் கில்லியாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

அதே போல தென்னாப்பிரிக்காவும் தேவையான வெற்றிகளுடன் 2வது இடத்தை பிடித்த நிலையில் ஆரம்பக்கட்ட தோல்விகளால் கடைசி இடத்திலிருந்த ஆஸ்திரேலியா அதன் பின் கொதித்தெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளுடன் 3வது இடத்தை பிடித்தது. இறுதியாக 4வது இடத்திற்கு நிலவிய கடுமையான போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளை பின்னுக்கு தள்ளி நியூஸிலாந்து தனதாக்கியது.

- Advertisement -

நியாயம் வேணாமா:
இதை தொடர்ந்து நடைபெறும் செமி ஃபைனல் சுற்றில் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் 2வது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் மோதுகின்றன. இந்நிலையில் இத்தொடரில் லீக் சுற்றில் முடிவில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய வீரர்களை வைத்து 11 பேர் கொண்ட 2023 கனவு உலக கோப்பை அணியை ஆஸ்திரேலிய வாரியத்தின் சமூக வலைதள பக்கம் வெளியிட்டுள்ளது.

ஆனால் அதில் சாதாரண வீரராக விளையாடி வரும் விராட் கோலியை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு வேடிக்கையாக அமைந்துள்ளது. ஏனெனில் இத்தொடரில் ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா இந்தியாவை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வைக்கும் அளவுக்கு கேப்டன்ஷிப்பில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். சரி பரவாயில்லை பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே சுயநலமின்றி அடித்து நொறுக்கி அபாரமான துவக்கத்தை கொடுக்கும் ரோஹித்துக்கு துவக்க வீரராகவாவது வாய்ப்பு கிடைத்ததா என்று பார்த்தால் அதுவுமில்லை.

- Advertisement -

அப்படி ரோகித் சர்மாவை கழற்றி விட்ட அந்த அணியை பார்க்கும் இந்திய ரசிகர்கள் கனவு அணியாக இருந்தாலும் நியாயம் வேண்டாமா என்று கலாய்கின்றனர். இருப்பினும் விராட் கோலி தலைமை தாங்கும் அந்த அணியில் குயின்டன் டீ காக், டேவிட் வார்னர் ஆகியோர் துவக்க வீரர்களாகவும் ரச்சின் ரவீந்தரா, ஐடன் மார்க்கம் ஆகியோர் மிடில் ஆர்டரில் இடம் பிடித்துள்ளனர். அதே போல ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் தென்னாப்பிரிக்காவின் மார்க்கோ ஜான்சன் ஆகியோர் உள்ளனர்.

இதையும் படிங்க: அரையிறுதியிலயும் இதுதான் நடக்கும்.. நியூசிலாந்து அணியை எச்சரித்த – குல்தீப் யாதவ்

மேலும் இந்தியாவின் ஷமி, பும்ரா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பிடித்துள்ள நிலையில் ஆடம் ஜாம்பா முதன்மை ஸ்பின்னராகவும் இலங்கையின் மதுசங்கா 12வது வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த அணி விவரம்: குயிண்டன் டீ காக் (கீப்பர்), டேவிட் வார்னர், ரச்சின் ரவீந்திரா, விராட் கோலி (கேப்டன்), ஐடன் மார்க்ரம், மார்கோ யான்சன், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஆடம் ஜாம்பா, ஜஸ்பிரித் பும்ரா, (தில்சன் மதுசங்கா)

Advertisement