புதிய தெ.ஆ சென்னை டி20 அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இவ்வளவு தொடர்புகளா – சுவாஸ்ரசியமான பதிவு

CSK Johannasburg CSA T20
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வெவ்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றாலும் 3 – 4 மணி நேரங்களில் பரபரப்பான தருணங்களை பரிசாக எதிர்பாராத முடிவுகளைக் கொடுக்கும் 20 ஓவர் போட்டிகளே இன்று ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் நம்பர் ஒன் தொடராக உருவெடுத்துள்ளது. குறிப்பாக 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கடந்து இன்று ஐசிசி நடத்தும் உலகக்கோப்பைகளைவிட தரமானதாகவும் அதிக பணத்தை அள்ளிக் கொடுக்கும் தொடராகவும் உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நம்பர் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதனால் 2025 முதல் 94 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக ஐபிஎல் மேலும் விரிவடைய உள்ளது. இப்படி வானளவு உயர்ந்து நிற்கும் ஐபிஎல் தொடரை பார்த்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற வாரியங்கள் தங்களது நாடுகளில் டி20 தொடரை நடத்தினாலும் ஐபிஎல் உச்சத்தை எட்ட முடியவில்லை. குறிப்பாக “மசான்சி லீக்” என்ற பெயரில் டி20 தொடரை நடத்தி வந்த தென்னாபிரிக்கா அந்த தொடர் தோல்வியடைந்ததால் கடந்த வருடம் மொத்தமாக நிறுத்தியது. இருப்பினும் உலக நாடுகளுடன் போட்டி போடுவதற்காக டி20 சேலஞ்ச் என்ற புதிய தொடரை அறிமுகப்படுத்தியுள்ள அந்நாட்டு வாரியம் அதை வரும் 2023 ஜனவரியில் நடத்த உள்ளது.

- Advertisement -

ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்:
இந்த தொடரில் பங்கேற்கும் 6 அணிகளையும் ஐபிஎல் தொடரில் ஏற்கனவே அணிகளை வைத்துள்ள நிர்வாகங்கள் மொத்தமாக வளைத்துப் போட்டுள்ளனர். குறிப்பாக ஜோகனஸ்பர்க் அணியை சென்னை நிர்வாகமும், கேப்-டவுன் அணியை மும்பை நிர்வாகமும், டர்பன் அணியை லக்னோ அணி நிர்வாகமும், பார்ல் அணியை ராஜஸ்தான் நிர்வாகமும், போர்ட் எலிசபெத் அணியை ஹைதராபாத் நிர்வாகமும், பிரிடோரியா அணியை டெல்லி அணி நிர்வாகமும் வாங்கியுள்ளன.

இந்த 6 அணிகளில் ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக திகழும் மும்பை, சென்னை போன்ற புகழ்பெற்ற அணிகள் டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகளை காட்டிலும் ரசிகர்களின் அதிக ஆதரவைப் பெற்று தென் ஆப்பிரிக்காவிலும் வெற்றிகரமாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த தொடரின் எஞ்சிய 5 நிர்வாகங்கள் வாங்கியுள்ள 5 நகரை மையப்படுத்திய அணிகளை காட்டிலும் சென்னை நிர்வாகம் வாங்கியுள்ள ஜோகானஸ்பர்க் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அதனுடைய இதயமாக கருதப்படும் தோனிக்கும் சில வரலாற்று தொடர்புகள் உள்ளது. அதை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. இன்று 4 கோப்பைகளை வென்று வெற்றிகரமான 2-வது ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள சென்னை கடந்த 2014 வரை நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் 2 கோப்பைகளை வென்றுள்ளது.

அதில் கடந்த 2010 சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிலையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய சென்னை இதே ஜோகனஸ்பர்க் நகரின் வாண்ட்ரஸ் மைதானத்தில் நடந்த மாபெரும் இறுதிப் போட்டியில் வாரியர்ஸ் அணியை தோற்கடித்து தனது முதல் கோப்பையை வென்றது. அதுதான் வெளிநாட்டு மண்ணில் சென்னை வென்ற முதல் கோப்பையாகும்.

- Advertisement -

2. அதனால் சென்னை, ஜோகனஸ்பேர்க் என எங்கு சென்றாலும் சென்னை அணிக்கு ரசிகர்களின் ஆதரவு எப்போதும் உள்ளதாக கடந்த வருடம் தோனி குறிப்பிட்டிருந்தார்.

3. அதைவிட சென்னையின் ரத்தமும் சதையுமாக கருதப்படும் எம்எஸ் தோனி தனது சர்வதேச டி20 கிரிக்கெட்டை கடந்த 2006இல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதே வாண்ட்ரஸ் மைதானத்தில் தான் தொடங்கினார். சொல்லப் போனால் வரலாற்றில் இந்தியா விளையாடிய முதல் டி20 போட்டியும் அந்த போட்டியாக அந்த மைதாந்த்தில் நடந்தது.

- Advertisement -

3. அதையும் மிஞ்சும் வகையில் கடந்த 2007இல் நடந்த வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத நிலையில் இந்தியாவை அற்புதமாக வழிநடத்திய எம்எஸ் தோனி இதே வாண்ட்ரஸ் மைதானத்தில் தான் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த மாபெரும் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் தனது சிறப்பான யுக்திகளால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார்.

4. மேலும் சென்னையின் நம்பிக்கை நாயகனாக சமீப காலங்களில் விளையாடிய தென்ஆப்பிரிக்காவின் நட்சத்திரம் பஃப் டு பிளேஸிஸ் உலகிலேயே டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற வித்தியாசமான உலக சாதனையை இந்த வாண்ட்ராஸ் மைதானத்தில் படைத்துள்ளார்.

5. அத்துடன் தற்போதைய சென்னை அணியில் விளையாடி வரும் நியூசிலாந்தின் டேவோன் கான்வே இந்த ஜோகன்னஸ்பர்க் நகரில் பிறந்து அந்த அணிக்காக இதே மைதானத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய பின்புதான் நியூசிலாந்துக்காக விளையாடத் தொடங்கினார்.

இதையும் படிங்க : இந்தியாவின் அந்த 2 வெற்றிகளுக்காக எதையும் செய்ய தயார் – விமர்சனங்களுக்கு விராட் கோலி அளித்த பதில் இதோ

இதுபோன்ற தொடர்புகள் இந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் சென்னையின் ஜோகனஸ்பர்க் அணி ஆரம்பத்திலேயே ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக செயல்பட முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement