பாபர் மாதிரி அவங்களோட ஆடிருந்தா.. விராட் கோலி எப்போவோ சச்சினை முந்திருப்பாரு.. முகமது அமீர் அதிரடி

Mohammed Amir
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. மேலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 7 போட்டிகளில் 442 ரன்கள் குவித்து இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

மறுபுறம் ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாம் ஆரம்பம் முதலே இத்தொடரில் சுமாராக செயல்பட்டது பாகிஸ்தானின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக 7 போட்டிகளில் அவர் 2 அரை சதங்கள் அடித்த போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியையே சந்தித்தது. ஆனாலும் விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பேசுவது தொடர்கிறது.

- Advertisement -

அமீர் பதிலடி:
இருப்பினும் இத்தொடரில் சுமாராக செயல்பட்டதால் விராட் கோலி, ராகுல் போன்றவர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று பாபர் அசாமை முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி விமர்சித்திருந்தார். குறிப்பாக வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ரன்கள் அடிக்காத பாபர் அசாம் மேட்ச் வின்னர் போல தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில் ஜிம்பாப்வே, நேபாள், வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்து நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக பாபர் அசாம் இருப்பதாக பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதை விட இதே கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக விராட் கோலி விளையாடினால் இந்நேரம் சச்சின் டெண்டுல்கரை எப்போதோ முந்தியிருப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருவேளை நேபாள், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக விராட் கோலி அதிகமாக விளையாடினால் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை பல காலத்திற்கு முன்பே உடைத்திருப்பார். பெரும்பாலும் அவர் அது போன்ற தொடர்களில் விளையாடுவதில்லை. அப்படியிருந்தும் எதற்காக விராட் கோலியுடன் தொடர்ந்து ஒப்பிடுகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை”

இதையும் படிங்க: சொந்த ஊர்லேயே சொதப்புனா சச்சின் மாதிரி சிலையா வைப்பாங்க.. வம்படியாக கலாய்த்த வாகனுக்கு வாசிம் ஜாஃபர் பதிலடி

“இந்த ஒப்பீடுகள் முட்டாள்தனமானது. அத்துடன் அவர்களின் ஆட்டத்தை பாருங்கள். இலங்கைக்கு எதிராக விராட் கோலி பந்துகளுக்கு நிகரான ரன்களை அடித்தார்” என்று கூறினார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி விரைவில் அதிக சதங்கள் (49) அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்து உடைக்க தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement