- Advertisement -
உலக கிரிக்கெட்

சிரித்த ரூட்.. 150 கி.மீ பவுலர் கிறிஸ் ஓக்ஸை ஸ்பின்னராக மாற வைத்த அம்பயர்.. காரணம் என்ன?

இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 3வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. செப்டம்பர் 6ஆம் தேதி துவங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஓலி போப் சதமடித்து 154, பென் டக்கெட் 86 ரன்கள் குவித்தனர்.

இலங்கை சார்பில் அதிகபட்சமாக மிலன் ரத்நாயகே 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு கருணரத்னே 9, குசால் மெண்டிஸ் 4, ஏஞ்சலோ மேத்யூஸ் 3, தினேஷ் சண்டிமல் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் துவக்க வீரர் பதும் நிசாங்கா அதிரடியாக விளையாடி அரை சதமடித்து 64 (51) ரன்கள் குவித்து எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

மாற்றிய அம்பயர்:

அதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் தனஞ்செயா டீ சில்வா – கமிண்டு மெண்டிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அதனால் இரண்டாவது நாள் முடிவில் 211-5 ரன்கள் எடுத்துள்ள இலங்கைக்கு களத்தில் டீ சில்வா 64*, கமிண்டு மெண்டிஸ் 54* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இப்போட்டியில் இலங்கை பேட்டிங் செய்ய வந்த போது மழை பெய்வது போன்ற சூழ்நிலை நிலவியது.

அந்த சூழ்நிலையில் இலங்கை பேட்டிங் செய்ய துவங்கியது. இருப்பினும் ஏழாவது ஓவரின் போது கார் மேகக் கூட்டங்கள் வந்ததால் போதுமான வெளிச்சம் கிடைக்கவில்லை. அதனால் ஒன்று ஸ்பின்னரை வைத்து போட்டியை தொடருங்கள் இல்லையேல் போட்டி நிறுத்தப்படும் என்று இங்கிலாந்து கேப்டன் ஓலி போப்பிடம் நடுவர் சொன்னார்.

- Advertisement -

திடீர் ஸ்பின்னர்:

மறுபுறம் ஏற்கனவே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஓக்ஸ் அந்த ஓவரின் 2 பந்துகளை வீசி முடித்திருந்தார். எனவே மீதி 4 பந்துகளை நீங்களே சுழல் பந்துகளாக போடுகிறீர்களா என்று அவரிடம் கேப்டன் ஓலி போப் கேட்டார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து எஞ்சிய 4 பந்துகளை ஆஃப் ஸ்பின் பந்துகளாக வீசினார்.

இதையும் படிங்க: 150 ரன்ஸ்.. ஆல் ரவுண்டராக அடித்த கேமரூன் க்ரீன்.. ஸ்காட்லாந்து சொந்த மண்ணில் நேர்ந்த பரிதாபம்

பொதுவாகவே 145 – 150 கிலோமீட்டர் வேகத்தில் அதிரடியாக வீசக்கூடிய கிறிஸ் ஓக்ஸ் அப்படி திடீரென ஸ்பின்னராக மாறி பந்து வீசியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக ஸ்லிப் பகுதியில் நின்ற ஜோ ரூட் வழக்கத்திற்கு மாறான அவருடைய பவுலிங்கை பார்த்து கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தார். இந்த நிலையில் இன்னும் 114 ரன்கள் பின்தங்கி இருக்கும் இலங்கை 3வது நாளில் சிறப்பாக பேட்டிங் செய்து முன்னிலை பெறுவதற்கு போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -