இன்னைக்கு எதையும் திங்க் பண்ண விரும்பல. தூங்கி எழுந்து நாளைக்கு பேசிக்குறோம் – இலங்கை பயிற்சியாளர் விசித்திர பேட்டி

Silverwood
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது கொழும்பு மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி எட்டாவது முறையாக ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணியானது 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 50 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 6.1 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இலங்கை அணி அடைந்த தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் கிரிஸ் சில்வர்வுட் கூறுகையில் :

நாங்கள் இந்த போட்டியில் மிகவும் குறைவான ரன்களை எடுத்து விட்டோம். இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்களது செயல்பாடு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. ஒரு உலகத்தரம் வாய்ந்த பவுலிங்க்கு எதிராக நாங்கள் சரிந்து விட்டோம். பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய இருவருமே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தனர்.

- Advertisement -

அவர்களது வேகமும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக இருந்தது. அதேபோன்று நாங்கள் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி விட்டோம். இந்த தொடரில் எங்களது அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் பலர் இடம்பெற்று விளையாடியிருந்தார்கள். அதில் சிலர் சிறப்பாகவும் செயல்பட்டு இருந்தனர். குறிப்பாக சதீரா, பதிரானா போன்றவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதையும் படிங்க : அவருக்கு பதிலா 2023 உ.கோ அணியில் அஷ்வின் செலக்ட்டான ஆச்சர்யப்படாதீங்க.. ஆசிய கோப்பை வென்ற பின்.. ரோஹித் சூசகம்

இந்த தோல்வி குறித்து இப்பொழுது எதையும் யோசிக்க போவதில்லை. நாங்கள் இப்பொழுது தூங்க செல்கிறோம் நாளை இந்த தோல்வியிலிருந்து பெற்றுள்ள பாடத்தை வைத்து சில முடிவுகளை எடுக்க உள்ளோம். இப்பொழுது தோல்வியைப் பற்றி பேசுவதை விட தூங்கி எழுந்து நாளை காலை இதுகுறித்து மற்ற பயிற்சியாளர் குழு நிர்வாகிகள் உடன் பேசுவது தான் சிறந்தது என சில்வர்வுட் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement