- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னை முந்தி புதிய கிங்காக சாதித்துள்ள ரோஹித்துக்கு வாழ்த்துக்கள்.. கோலி இப்போவும் பெஸ்ட்.. கிறிஸ் கெயில்

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே அத்தொடரை வென்றுள்ள இந்தியா சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் காண்பித்துள்ளது. முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்திய போட்டிகளில் தடுமாறி வந்தார்.

அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் கட்டாக் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பினார். குறிப்பாக 12 பவுண்டரிகள் ஏழு சிக்ஸர்களை பறக்கவிட்டு அவர் 119 ரன்கள் குவித்து தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபித்தார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக சிக்ஸர்கள் (337) அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் உலக சாதனையையும் அவர் உடைத்தார்.

- Advertisement -

வாழ்த்திய கெயில்:

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 331 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை. பாகிஸ்தானின் ஜாம்பவான் சாஹித் அப்ரிடி 351 சிக்ஸருடன் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் தம்மை முந்திய ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கெயில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இப்போதும் சிறந்த வீரர் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்துக்கள். விளையாட்டுக்கு எப்போதுமே ஒரு புதிய பொழுதுபோக்காளர் தேவை. நான் செய்தது போலவே இத்தனை வருடங்களாக ரோகித் சர்மா ரசிகர்களை பொழுது போக்கி வருகிறார். எனவே அவர் தற்போது டவுனில் புதிய சிக்ஸர் கிங். அவருக்கு வாழ்த்துக்கள் இன்னும் அவர் நிறைய சிக்சர்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்”

- Advertisement -

கோலிக்கு ஆதரவு:

“விராட் கோலி இப்போதும் உலகில் சிறந்த வீரர். ஃபார்மை தாண்டி விராட் கோலி இப்போதும் சிறந்த வீரர். அவருடைய புள்ளி விபரங்களும் அனைத்து வகையான ஃபார்மெட்டில் எவ்வளவு சதங்கள் அடித்துள்ளார் என்பது அவற்றை நிரூபிக்கும். இது அனைத்து வகையான வீரர்களும் செல்லக் கூடிய ஒரு கடினமான காலமாகும்”

இதையும் படிங்க: 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தானிடம் இந்த தப்பை செய்யலன்னா.. இந்தியா ஜெயிச்சுருக்கும்.. சஞ்சய் பங்கர்

“இது விராட் கோலி கேரியரின் கடைசிப் பகுதியில் வருகிறது என்பதை எனக்குத் தெரியும். ஆனால் இது சாதாரணமாக நடக்கக் கூடியதாகும். இது போன்ற சூழ்நிலைகளில் அவர் தம்மைத்தாமே ஆதரவு கொடுத்துக் கொண்டு மீண்டும் வரவேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அந்தத் தொடரின் மூன்றாவது போட்டி புதன்கிழமை அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -