- Advertisement -
இந்திய கிரிக்கெட்

லாராவுக்காக வாழ்நாளில் பெரிய தப்பு பண்ணிட்டீங்க.. பத்தோடு 11 போதுமா? வியான் முல்தரை சாடிய கெய்ல்

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தென்னாபிரிக்கா அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரை 2 – 0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா எளிதாக வென்றது. அத்தொடரின் 2வது போட்டியில் வியான் முல்தர் தலைமையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது தென்னாப்பிரிக்காவுக்கு அபாரமாக விளையாடிய முல்தர் முச்சதத்தை அடித்து 367* ரன்கள் குவித்தார். அப்போது 400* ரன்கள் அடித்து பிரைன் லாராவின் உலக சாதனையை முல்தர் உடைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது தங்களுடைய ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்த அவர் உலக சாதனையை தவற விட்டது பல கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

- Advertisement -

மிகப்பெரிய தவறு:

அது பற்றி கேட்டதற்கு அந்த சாதனை கிரிக்கெட்டின் ஜாம்பவான் பிரைன் லாராவிடம் இருப்பதற்கே தகுதியானது என்று முல்தர் கூறினார். அடுத்த முறை 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் இதையே செய்வேன் என்றும் முல்தர் கூறினார். இந்நிலையில் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைத்த சாதனையை தவற விட்ட முல்தர் மிகப்பெரிய தவறு செய்துள்ளதாக கிறிஸ் கெய்ல் சாடியுள்ளார்.

அந்த சாதனையை செய்திருந்தால் முல்தர் ஜாம்பவானாக கருதப்பட்டிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதை தவற விட்ட முல்தர் பத்தோடு 11 வீரர்களில் ஒருவராக மட்டுமே அறியப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி கெய்ல் பேசியது பின்வருமாறு. “இதெல்லாம் அடிக்கடி நடக்காது. அடுத்ததாக முச்சதம் எப்போது அடிப்பீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியாது”

- Advertisement -

கெய்ல் சாடல்:

“இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் போது சரியாக பயன்படுத்த வேண்டும். அந்த சாதனை பிரைன் லாராவிடம் இருக்க வேண்டும் என்று சொன்ன அவர் தாராளமானவர். ஒருவேளை அவர் அந்த தருணத்தில் என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் பதற்றமடைந்து இப்படி செய்திருக்கலாம். 367இல் இருக்கும் உங்களுக்கு அந்த சாதனை படைக்கும் வாய்ப்பு தாமாக கிடைக்கும்”

இதையும் படிங்க: 4 நாளைக்கு ஒருமுறை டை அடிக்கிறேன்.. 10000 ரன்ஸை தவற விட்டு ரிட்டையரானது ஏன்? விராட் கோலி விளக்கம்

“அதை விட்டால் எப்படி ஜாம்பவானாக முடியும்? ஜாம்பவான்களுடன் தான் சாதனைகள் வரும். அது அவருடைய தவறு. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இளைஞரே நீங்கள் அதை பெரிய நேரத்தில் தவற விட்டுள்ளீர்கள். சில நேரங்களில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக நீங்கள் விரும்பினாலும் ஒரு ரன் கூட அடிக்க முடியாது. எனவே எதிரணி யார் என்பது முக்கியமல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம், 200, 300, 400 போன்ற எதை அடித்தாலும் அது சிறப்பானது. அவர் பதற்றமடைந்து அதை தவற விட்டுள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -