இந்தமுறை விடுங்க.. அடுத்த உலகக்கோப்பையில விராட் கோலி ஆடுவாரா? – கிரிஸ் கெயில் அளித்த நேரடி பதில் இதோ

Gayle-and-Kohli
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையையும் ஐசிசி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

Virat Kohli

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்களுக்கு இதுவே கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Gayle 1

இந்நிலையில் விராட் கோலி இந்த உலகக் கோப்பை தொடரோடு தனது கடைசி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா? அல்லது அடுத்து வரும் உலகக்கோப்பை தொடரிலும் விளையாடுவாரா? என்பது குறித்த கேள்விக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான கிரிஸ் கெயில் நேரடியாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

என்னுடைய கருத்துப்படி விராட் கோலிக்கு இது கடைசி உலகக்கோப்பை கிடையாது. நிச்சயமாக அவர் 2027 ஆம் ஆண்டு உலக கோப்பையிலும் விளையாடுவார். அதற்குண்டான திறமையும், உடற் தகுதியும் அவரிடம் உள்ளது. இம்முறை இந்தியாவில் இந்த உலகக் கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி இந்த கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று கிரிஸ் கெயில் கூறினார்.

இதையும் படிங்க : சும்மா விமர்சிக்காதிங்க, ஐபிஎல் இல்லனா ஃபைனலில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் தோல்வி கிடைச்சுருக்கும் – கங்குலி பதிலடி

மேலும் விராட் கோலி உடல் அளவிலும் மனதளவிலும் தற்போது உறுதியாக உள்ளார். எல்லா வீரர்களுக்குமே ஒரு கடினமான காலம் இருக்கும் அந்த காலத்தை கடந்து அவர்கள் சாதித்து காண்பிப்பார்கள். அந்த வகையில் விராட் கோலியும் தற்போது இழந்த பார்மை மீட்டெடுத்து மிகச்சிறப்பாக விளையாடி வருவதால் நிச்சயம் அடுத்த உலக கோப்பை தொடரிலும் அவர் விளையாடுவார் என கெயில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement