யாராலும் நெருங்க முடியாத சச்சினின் சாதனையை.. உடைச்சு காமிச்சதே அவரோட தரம்.. கெயில் பாராட்டு

Chris Gayle 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியாவை ஃபைனலில் தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. மறுபுறம் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா லீக் மற்றும் செமி ஃபைனலில் அபாரமாக விளையாடி சந்திக்காத தோல்வியை ஃபைனலில் சுமாராக விளையாடி பதிவு செய்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சீனியர் வீரர்கள் என்பதற்கேற்ப மிகவும் பொறுப்புடன் விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி நிறைய சாதனைகளை படைத்தனர். அதில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்து உலகக்கோப்பையில் அதிக சதங்கள், சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் கிறிஸ் கெயில் சாதனைகளை உடைத்தார்.

- Advertisement -

கெயில் பாராட்டு:
மறுபுறம் அவரை மிஞ்சிய விராட் கோலி ஒரு படி மேலே சென்று 765 ரன்களை 95 என்ற சராசரியில் குவித்து உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (50) அடித்த வீரர் ஆகிய சச்சின் டெண்டுல்கரின் 2 ஆல் டைம் சாதனையை உடைத்தார். ஆனால் இறுதியில் கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் அவருடைய அற்புதமான ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது பரிசாக சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய காலத்திலேயே அசத்திய விராட் கோலி தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளதாக கிறிஸ் கெயில் பாராட்டியுள்ளார். மேலும் வேறு யாருமே ஒருநாள் கிரிக்கெட்டில் 40 சதங்கள் கூட அடிக்காத நிலையில் சச்சினின் 49 சதங்கள் சாதனையை உடைத்ததே விராட் கோலியின் தரம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய பின்வருமாறு.

- Advertisement -

“நான் ஆர்சிபி அணிக்காக விளையாடிய போது விராட் கோலி மிகுந்த திறமை மிக்கவராக இருந்தார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் அதிகமாக அப்போதே அசத்தினார். அப்போது முதலே நாம் அனைவருக்கும் முன்பாக சிறப்பாக விளையாடி வரும் அவருடைய அசத்தலான ஆட்டத்தில் எவ்விதமான ரகசியமும் கிடையாது”

இதையும் படிங்க: நஷ்ட ஈடு கொடுங்க.. இந்தியாவின் முடிவால் ஐசிசியிடம் மல்லு கட்டும் பாகிஸ்தான்.. நடந்தது என்ன?

“ஆனால் அங்கிருந்து அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்துள்ளது நம்ப முடியாததாக இருக்கிறது. அதிலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்தது அற்புதமானது. அதற்கான பாராட்டுகளை நாம் கொடுப்பதற்கு அவர் தகுதியானவர். ஏனெனில் இப்போதுள்ள வீரர்களில் வேறு யாருமே சச்சினின் அந்த சாதனையை நெருங்க முடியவில்லை அல்லது தொட முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement