நஷ்ட ஈடு கொடுங்க.. இந்தியாவின் முடிவால் ஐசிசியிடம் மல்லு கட்டும் பாகிஸ்தான்.. நடந்தது என்ன?

PCB IND vs PAk
- Advertisement -

ஆசிய கண்டத்தில் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சனை காரணமாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் நடைபெற்ற 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களை வலுவான அணி என்பதை காண்பித்தது.

முன்னதாக 2023 ஆசிய கோப்பை முழுவதுமாக பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானில் பாதுகாப்பு அம்சங்களில் குறை இருப்பதாக கருதிய இந்தியா அங்கு சென்று விளையாட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. அதற்கு எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் உங்கள் நாட்டில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்தது.

- Advertisement -

நஷ்ட ஈடு கொடுங்க:
இறுதியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆசிய கவுன்சில் தலைவராக இருப்பதால் பாகிஸ்தான் விளையாடிய போட்டிகள் மட்டும் அந்நாட்டிலும் இந்தியா விளையாடிய எஞ்சிய அனைத்து போட்டிகளும் இலங்கையிலும் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மண்ணில் பல வருடங்கள் கழித்து நடைபெற உள்ளது.

ஆனால் பாகிஸ்தானில் பாதுகாப்பு அம்சங்கள் முன்னேறியதற்கான எந்த உறுதியான சூழலும் தெரியாத காரணத்தால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாட அந்நாட்டிற்கு இந்தியா செல்லாது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் 2023 ஆசிய கோப்பை போலவே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியிலும் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் அந்நாட்டிலும் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

ஒருவேளை சில வெளிநாட்டு அணிகளும் பாகிஸ்தான் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் மொத்தமாக 2025 சாம்பியன்ஸ் டிராபி துபாய்க்கு நகர்த்தப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தங்கள் நாட்டுக்கு மீண்டும் வராமல் இந்தியா புறக்கணித்தால் அதற்காக நஷ்ட ஈடு கொடுங்கள் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத ஐசிசி நிர்வாகி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: வாய்ப்பு கொடுத்தா அதுலயும் இந்தியா போன்ற எதிரணிகளை தோற்கடிப்பேன்.. கமின்ஸ் ஓப்பன்டாக்

“பிசிசிஐ தங்களுடைய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பாமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை பிசிபி நிர்வாகிகள் ஐசிசியிடம் விவாதித்துள்ளனர். அதனால் இந்தியாவுக்கு சாதகமாக கடைசி நேரத்தில் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்றும் ஐசிசியிடம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 2 வருடங்களில் நிறைய டாப் வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து பாதுகாப்பாக விளையாடி சென்றதாக பிசிபி அதிகாரிகள் கூறினர். எனவே இந்தியா தங்களுடைய அணியை அனுப்பாமாலோ அல்லது சாம்பியன்ஸ் டிராபி வெளிநாட்டுக்கு நகர்த்தப்பட்டாலோ அதற்கான நஷ்ட ஈட்டை தங்களுக்கு கொடுக்குமாறு பாகிஸ்தான் ஐசிசியிடம் கேட்டுக்கொண்டது” என்று கூறினார்.

Advertisement