வாய்ப்பு கொடுத்தா அதுலயும் இந்தியா போன்ற எதிரணிகளை தோற்கடிப்பேன்.. கமின்ஸ் ஓப்பன்டாக்

Pat Cummins 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு காலத்திற்கும் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்றது. குறிப்பாக ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்தியா செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்து யாராலும் வீழ்த்த முடியாத அணியாக உச்சகட்ட ஃபார்மில் மிரட்டி வந்தது.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை பவுலிங் மற்றும் ஃபீல்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு அடக்கிய ஆஸ்திரேலியா 240 ரன்களுக்கு சுருட்டி கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

- Advertisement -

வாய்ப்பு கொடுத்தா:
முன்னதாக ஆரோன் பின்ச் ஓய்வு பெற்றதாலும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் சிக்கியதாலும் வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் ஆஸ்திரேலியாவின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையை வென்ற அவர் பரம எதிரி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சந்தித்து 2 – 2 (5) என்ற கணக்கில் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கோப்பையை தக்க வைக்க உதவினார்.

அந்த வகையில் ஒரே வருடத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ், உலகக் கோப்பை ஆகிய 3 வரலாற்று சிறப்புமிக்க சாம்பியன் பட்டங்களை வென்று தமக்குள் மிகச் சிறந்த கேப்டன் இருக்கிறார் என்பதை பட் கமின்ஸ் காண்பித்துள்ளார். இந்நிலையில் 2024 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்தும் பொறுப்பு தமக்கு கிடைத்தால் இந்தியா போன்ற அனைத்து அணிகளையு. தோற்கடித்து வெற்றியை பெற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாக பட் கமின்ஸ் மறைமுகமாக தெரிவித்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“உண்மையாக அதைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் மிட்சேல் மார்ஷ் கடந்த டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டை போலவே வரும் காலங்களில் டி20 கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். அதைப் பற்றி தற்போது அதிகமாக பேசவில்லை. ஆனாலும் அதற்கான வேலைகளை நாங்கள் செய்ய உள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிவிப்பை கவனிச்சீங்களா? – அப்புறம் என்ன ஒரே கொண்டாட்டம் தான்

அத்துடன் 2021 டி20 உலகக் கோப்பை, 2023 சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய அடுத்தடுத்த ஐசிசி தொடர்களில் பதிவு செய்த வெற்றிகள் உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா எந்தளவுக்கு வலுவான அணியாக இருக்கிறது என்பதை காண்பிப்பதாகவும் அவர் பெருமையுடன் தெரிவித்தார். அப்படி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததால் அவர் டி20 கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவின் கேப்டன்ஷிப் வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement