சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிவிப்பை கவனிச்சீங்களா? – அப்புறம் என்ன ஒரே கொண்டாட்டம் தான்

Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக தற்போது வீரர்களின் ஏலமானது வரும் டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரமும், வெளியேற்றப்பட்ட வீரர்களின் விவரம் குறித்த முழு பட்டியலையும் நவம்பர் 26-ஆம் தேதி அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்து இருந்தது.

அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரங்களையும், வெளியேற்றப்பட்ட வீரர்களின் விவரங்களையும் வெளியிட்டு விட்டனர்.

- Advertisement -

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டாக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், கைல் ஜேமிசன், சிஸாண்டா மஹாலா போன்ற வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டு வீரர்களான சுப்ரன்சு சேனாதிபதி, ஆகாஷ் சிங், பகத் வர்மா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அதன் காரணமாக தற்போது சென்னை அணியிடம் கைவசம் 31 கோடி ரூபாய் மீதமுள்ள நிலையில் 6 இந்திய வீரர்கள் மற்றும் 3 விளையாட்டு வீரர்கள் என ஒன்பது வீரர்களை ஏலத்தில் எடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு தற்போது ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் 42 வயதான தோனி கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் முடிவடையும் போதே ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என்று அறிவித்தார். ஆனாலும் அவருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடுவது இறுதிக்கட்டத்தில் தான் தெரியும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிஎஸ்கே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தக்கவைக்கப்பட்டு வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் தோனியையே கேப்டனாக நியமித்து அவரே இந்த ஆண்டும் கேப்டன்சி செய்வார் என்று உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : பும்ராவின் லேட்டஸ்ட் பதிவால் விழுந்த விரிசல்.. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் மோதலா? – விவரம் இதோ

இபப்டி சி.எஸ்.கே வெளியிட்ட இந்த உறுதிசெய்யப்பட்ட அறிவிப்பில் தோனியே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இந்த அறிவிப்பினை பார்த்து விட்டு தற்போதே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பித்தனர். மேலும் நிச்சயம் தோனிக்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரே கடைசி தொடராக இருக்கும் என்பதனால் அவருக்கு இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement