பும்ராவின் லேட்டஸ்ட் பதிவால் விழுந்த விரிசல்.. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் மோதலா? – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாகவே தற்போது டிரேடிங் முறையில் சில அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மாற்றமடைந்துள்ள வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த இரண்டு சீசன்களாக கேப்டன்சி செய்து வந்த ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் தற்போது ஏலத்திற்கு முன்னதாக டிரேடிங் முறையில் மீண்டும் தங்களது அணியில் இணைத்துள்ளது.

இதன் காரணமாக மும்பை அணியின் ரசிகர்கள் தற்போது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு தற்போது 36 வயதை எட்டி இருக்கும் ரோஹித் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே விளையாடுவார் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ஹார்திக் பாண்டியா பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

மேலும் கூடுதலாக கிடைத்த தகவலின் படி அடுத்த ஆண்டு ஹார்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஆண்டே ரோஹித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் வாய்ப்பு இருப்பதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் தற்போதைய இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக பார்க்கப்படும் ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக செய்லபடுவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டே அவரை கேப்டனாக நியமித்தாலும் நியமிக்கலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி ஹார்டிக் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்பது மும்பை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு பிடிக்கவில்லை என்றும் அவருக்கு மும்பை அணியின் நிர்வாகத்துடன் தற்போது மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக சில தகவல்கள் இணையத்தில் வதந்தியாக பரவி வருகிறது. ஏனெனில் ஜஸ்ப்ரீத் பும்ரா கடைசியாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் “சில நேரங்களில் அமைதியாக இருப்பது தான் சிறந்த பதில்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பாண்டியா வேணாம்.. 2024 டி20 உ.கோ இந்திய அணிக்கு அவர் தான் கேப்டனா இருக்கணும்.. ஜஹீர் கான் கோரிக்கை

ஏனெனில் ரோகித் சர்மாவிற்கு அடுத்து பும்ராவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது மீண்டும் ஹார்டிக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பியுள்ளதால் அவருக்கே கேப்டன் பதவிக்கான முதன்மை வாய்ப்பு இருக்கும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பும்ரா தனக்கு கிடைக்க வேண்டிய கேப்டன் பதவி ஹார்திக் பாண்டியாவிற்கு செல்ல இருப்பதால் தான் இதுபோன்ற கருத்தை பகிர்ந்து இருப்பதாகவும் சில வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும் இது குறித்த உண்மையான அறிவிப்பை பும்ரா வெளிப்படுத்தினால் மட்டுமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement