ஆஷஸ் விட இந்தியா – பாகிஸ்தான் தான் பெருசு, அவங்க உழைப்புக்கு மதிப்பு கொடுங்க – ஐசிசி’க்கு கிறிஸ் கெயில் கோரிக்கை

Chris gayle
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. அதில் பொதுவாக சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

INDvsPAK

- Advertisement -

அதற்கு நிகராக அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிவாகை சூடி கௌரவத்தை காப்பாற்றுமா என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் வெற்றி காண்பதற்கு ஆக்ரோசத்துடன் முழுமூச்சுடன் மோதிக் கொள்வார்கள் என்பதால் அந்த போட்டியில் அனல் பறக்கும் என்று சொல்லலாம். மேலும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே இவ்விரு நாடுகளும் மோதி வருகின்றன.

கெயில் கோரிக்கை:
அதன் காரணமாக இப்போதெல்லாம் இந்தியா – பாகிஸ்தான் மோதுவதை பார்க்க வேண்டுமெனில் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது அந்த போட்டியின் மவுசையும் தனித்துவத்தையும் 200% உயர்த்தியுள்ளது. அதே போல கடைசியாக 2022 டி20 உலக கோப்பையில் மோதிய போது பாகிஸ்தானை சரித்திர இன்னிங்ஸ் விளையாடி விராட் கோலி தோற்கடித்தது போல இவ்விரு அணிகள் மோதும் போட்டியின் தரமும் உச்சகட்டமாகவே இருக்கிறது.

அதன் காரணமாக இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளை பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை துவங்கினால் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்து விடுகிறது. சொல்லப்போனால் அகமதாபாத் நகரில் சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 10000 என இருந்த உள்ளூர் ஹோட்டல் அறைகள் கட்டணம் இந்தியா – பாகிஸ்தான் 2023 உலகக் கோப்பை போட்டி நடைபெறும் அட்டவணை வெளியானதும் ஒரே இரவில் ஒரு லட்சத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையின் மாபெரும் ஃபைனல் போட்டியை விட இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியின் வாயிலாகவே ஐசிசி அதிக பணத்தை சம்பாதிப்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே அதில் முழு மூச்சுடன் விளையாடி தரமான போட்டியை விருந்து படைத்து அதிக வருமானத்திற்கு காரணமாக இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் வீரர்களுக்கு உழைப்பின் பரிசாக ஐசிசி சற்று அதிக பணத்தை கொடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடரை விட இந்தியா – பாகிஸ்தான் மோதலே அனல் பறக்கும் பெரியது என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

gayle

“ஆஷஸ் தொடரை விட இந்தியா – பாகிஸ்தான் மோதும் உலகக் கோப்பை போட்டிகள் மிகப்பெரியது. உலகின் மலை போன்ற அந்தப் போட்டியை அனைவரும் பார்க்கின்றனர். அதில் இம்முறை என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் குறிப்பாக உலகக் கோப்பையில் விளையாடும் போதெல்லாம் அதனால் கிடைக்கும் வருமானம் மலை போல் இருக்கிறது. சொல்லப்போனால் அந்த ஒரு போட்டி அந்த மொத்த ஐசிசி தொடரின் வருமானத்திற்கும் அஸ்திவாரமாக இருக்கிறது. அதனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் சற்று அதிக பணத்தைக் கேட்க வேண்டும். ஏனெனில் அந்த போட்டி தான் தொலைக்காட்சி உரிமை வாயிலாகவும் அதிக பணத்தை கொடுக்கிறது”

இதையும் படிங்க:உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கு, 2023 உ.கோ அவங்க தான் ஜெய்ப்பாங்க – வாசிம் அக்ரம் உற்சாக பேட்டி

“அந்த நிலையில் ஐசிசி வாரியத்தில் எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஒருவேளை நான் அந்த இடத்தில் இருந்தால் நிச்சயமாக அதிக பணத்தை கொடுப்பேன். மேலும் வெஸ்ட் இண்டீஸ் போலவே இந்தியாவும் நீண்ட காலமாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்பதை நான் அறிவேன். நாங்கள் கடைசியாக 2016இல் வென்றோம். எனவே இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணியாக சொந்த மண்ணில் களமிறங்கும் இந்தியாவுக்கு அழுத்தமும் அதிகமாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement