விராட், சூர்யா இல்ல – என்னோட 175 ரன்கள் சாதனையை அவர் தான் உடைக்க போறாரு – கெயில் சொன்ன இந்திய வீரர், ரசிகர்கள் வியப்பு

gayle
Advertisement

நவீன கிரிக்கெட்டில் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ள டி20 கிரிக்கெட் இன்று சர்வதேச அளவில் மட்டுமல்லாமல் ஐபிஎல் போல உலகின் அனைத்து நாடுகளிலும் பிரீமியர் லீக் டி20 தொடர்களாக நடைபெற்று வருகிறது. அதில் 2007 டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்து சதமடித்தது முதல் தற்போது 43 வயதில் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் எதிரணி பவுலர்களைப் பந்தாடுவது வரை வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் கிறிஸ் தனது அதிரடி சரவெடியான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

அத்துடன் 463 போட்டிகளில் விளையாடி 14562* ரன்களை விளாசி 1056 சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்து வரும் அவர் இந்த உலகிலேயே டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று போற்றும் அளவுக்கு ஏராளமான சாதனைகளை அசால்டாக படைத்துள்ள அவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக புனே அணியை புரட்டி எடுத்தது யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -

ரசிகர்கள் வியப்பு:
அன்றைய நாளில் விஸ்வரூபம் எடுத்து சூறாவளி புயலாக பேட்டிங் செய்த அவர் 13 பவுண்டரி 17 சிக்சர்களைப் பறக்க விட்டு 175* (66) ரன்கள் விளாசினார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர், அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் உட்பட அவர் படைத்த பல சாதனைகள் 10 வருடங்கள் கடந்தும் இன்றும் எந்த மகத்தான பேட்ஸ்மேன்களாலும் உடைக்க முடியாமல் இருந்து வருகிறது. இருப்பினும் சாதனை என்றால் ஒருநாள் உடைப்பதற்காக தான் படைக்கப்படுவதாக தெரிவிக்கும் கிறிஸ் கெயில் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக படைத்துள்ள தன்னுடைய உலக சாதனையை இந்தியாவின் கேஎல் ராகுல் தகர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

Gayle-2

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “அதை ஒருவரால் உடைக்க முடியும் என்றால் அது கேஎல் ராகுலாக இருப்பார் என்று நினைக்கிறேன். அவருடைய நாளில் அவரால் அதை செய்ய முடியும். அந்தப் பெரிய ஸ்கோரை தம்மால் அடிக்க முடியும் என அவர் நம்புவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நான் சொல்வதைக் கேளுங்கள். பெரும்பாலான சமயங்களில் இல்லையென்றாலும் சில நேரங்களில் கேஎல் ராகுல் அது போல பேட்டிங் செய்ய முடிவெடுத்து விட்டால் அதைப் பார்ப்பதற்கு நான் மிகவும் விரும்புவேன். அதை அவரால் நிச்சயம் நெருங்க முடியும்”

- Advertisement -

“குறிப்பாக 15 முதல் 20வது ஓவர் வரை நிலைத்து நின்று அவர் பேட்டிங் செய்வது மிகவும் ஆபத்தானது. அவரால் டெத் ஓவர்களில் மிகவும் அதிரடியாக பேட்டிங் செய்ய முடியும். எனவே நல்ல தொடக்கத்தை பெற்று பெரிய சதத்தையும் தொட்டால் நிச்சயமாக அவரால் 175 ரன்களை தாண்ட முடியும்” என்று கூறினார். இருப்பினும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா போன்ற நிலைத்து நின்று அதிரடியாக ரன்களை குவிக்கும் வீரர்களின் பெயரை தெரிவிக்காமல் கேஎல் ராகுல் பெயரை அவர் தெரிவித்துள்ளது பல இந்திய ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக அமைகிறது.gayle

ஏனெனில் 2019 வாக்கில் அதிரடியாக ரன்களை குவித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய ராகுல் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சுயநல எண்ணத்துடன் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் இந்திய அணியிலும் நிலையான இடத்தை இழந்துள்ளார்.

இதையும் படிங்க:அந்த ஆஸி பவுலரிடம் விராட் கோலி தடுமாறுவதை சரி செய்ய டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நடராஜன் தேவை – முன்னாள் பாக் வீரர்

அதை விட 175 ரன்களை தொடுவதற்கு முதல் பந்திலிருந்தே சரவெடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது அவசியமாகும். ஆனால் தம்மைப் பொறுத்த வரை ஸ்ட்ரைக் ரேட் என்பது ஓவர்ரேட்டட் என்றும் போட்டியின் நிலைமைக்கேற்ப விளையாட வேண்டும் என்று சமீபத்தில் தெரிவித்த ராகுல் தனது வாழ்நாளில் 175 ரன்கள் சாதனையை முறியடிப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement