ஜடேஜாவை மட்டும் பி.சி.சி.ஐ எப்போதுமே ஒதுக்குகிறது. அவங்க செய்றது தப்பு – கண்டனத்தை தெரிவித்த சோப்ரா

Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஆண்டு தோறும் வீரர்களின் செயல்பாட்டினை கணக்கில்கொண்டு சம்பள பட்டியலை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சம்பளப் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. அதில் ஏ ப்ளஸ் பிரிவில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே அதிக சம்பளமாக ரூபாய் 7 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

Pant-1

- Advertisement -

அந்த வகையில் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஆகிய இருவர் மட்டுமே இந்த ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். அதேபோன்று பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டிற்கு 5 கோடி ரூபாயும், சி பிரிவில் இருப்பவர்களுக்கு ஆண்டிற்கு மூன்று கோடி ரூபாயும், கடைசி பிரிவில் இருப்பவர்களுக்கு ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சம்பள பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெற வேண்டிய ஜடேஜாவை இம்முறையும் பிசிசிஐ பி பிரிவிலேயே தொடர வைத்துள்ளதால் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Jadeja

மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு மிக சிறப்பாக செயல்பட்டு வரும் ஜடேஜா ஒவ்வொரு முறையும் தான் விளையாடும்போது பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு சமீபகாலமாகவே இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக செயல்பட்டு வரும் அவரும் கேஎல் ராகுல் நிச்சயம் ஏ ப்ளஸ் பிரிவில் இருக்க வேண்டிய வீரர்கள்.

- Advertisement -

ஆனால் அவர்களை தவிர்த்து வரும் பிசிசிஐ கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஏ பிரிவில் வைத்து வருவது தவறான ஒன்று என்று கூறியுள்ளார். அதேபோன்று மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எதிர்காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழப்போகும் ரிஷப் பண்ட்க்கும் ஏ ப்ளஸ் பிரிவில் இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : INDvsSL : 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து 2 முக்கிய வீரர்கள் விலகல் – ஜெயிக்க வாய்ப்பே இல்ல

அதோடு இந்த விவரங்களை எல்லாம் கணக்கில் கொண்டு பிசிசிஐ அடுத்த முறையாவது சரி சமமான ஊதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement