INDvsSL : 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து 2 முக்கிய வீரர்கள் விலகல் – ஜெயிக்க வாய்ப்பே இல்ல

INDvsSL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே மார்ச் 4-ஆம் தேதி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இத்தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ashwin 1

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்று அனைவரும் விரும்பும் வேளையில் அதற்கு சாதகமாக தற்போது இரண்டு இலங்கை வீரர்கள் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு எதிராக சிறப்பாக பந்துவீசி வரும் துஷ்மந்தா சமீரா இந்த போட்டியில் ஓய்வு வேண்டும் என்று விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவை தொடர்ச்சியாக ரன் அடிக்க விடாமல் வீழ்த்திவரும் இவர் இந்த போட்டியில் இல்லாதது இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது என்று கூறலாம்.

Nissanka

அதே போன்று மற்றொரு வீரராக முதலாவது டெஸ்ட் போட்டியின் போது தனது சிறப்பான ஆட்டத்தை இரண்டு இன்னிங்ஸ்களிலும் வெளிப்படுத்திய பதும் நிஷாங்கா முதுகுவலி பிரச்சினை காரணமாக இந்த இரண்டாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார். தற்போதைய இலங்கை அணியில் மிகச் சிறந்த பவுலராகவும், மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் பார்க்கப்படும் இவர்கள் இருவருமே ஒரே நேரத்தில் விலகியிருப்பது தற்போது இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது.

- Advertisement -

அதேவேளையில் இலங்கை அணிக்கு இவர்கள் இருவரது விலகல் நிச்சயம் பெரிய பின்னடைவை தரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டுமெனில் இந்திய அணி இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய சூழலில் இவ்விரு வீரர்கள் வெளியேறி உள்ளதால் இந்த இரண்டாவது போட்டியில் கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என்றே கூறலாம்.

chameera

அதுமட்டுமின்றி தற்போது உள்ள இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் இந்த பகல் இரவு போட்டியிலும் இலங்கை அணியை இந்திய அணி எளிதாக வீழ்த்தி டி20 தொடரை தொடர்ந்து டெஸ்ட் தொடரையும் வாஷ் அவுட் செய்து கைப்பற்றும் என்று நம்பலாம்.

Advertisement