- Advertisement -
இந்திய கிரிக்கெட்

போதும் சாமி, எனக்கு ஐபிஎல்’லே வேணான்னு அவர் முடிவெடுத்துட்டாரு – முன்னாள் சிஎஸ்கே வீரரை பாராட்டும் டிகே

சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 513 ரன்கள் துரத்தி வரும் வங்கதேசம் 4வது நாள் முடிவில் 272/6 என்ற நிலையில் உள்ளது. இதனால் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இப்போட்டியில் நிறைய வீரர்கள் பங்காற்றினாலும் சீனியர் பேட்ஸ்மேன் செட்டேஸ்வர் புஜாரா முதல் இன்னிங்ஸில் 90 ரன்களும் 2வது இன்னிங்ஸில் சதமடித்து 102* ரன்களும் குவித்து முக்கிய பங்காற்றினார். குறிப்பாக கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு அடிலெய்ட் நகரில் 193 ரன்கள் குவித்து சதமடித்திருந்த அவர் கடந்த 3 வருடங்களாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் ஒரு வழியாக 1443 நாட்கள் கழித்து சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இவர் பொறுமையின் சிகரமாக நங்கூரமாக நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து பெரிய ரன்களை குவித்து இந்தியாவை வெற்றி பெறும் ஸ்டைலை கொண்டவர். அதனாலேயே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை இழந்த இவர் நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் ஜாம்பவான் ராகுல் ட்ராவிட் இடத்தை நிரப்பும் அளவுக்கு அசத்தி வருகிறார்.

- Advertisement -

ஐபிஎல் வேண்டாம்:

குறிப்பாக 2019 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 500+ ரன்களை குவித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல தொடர் நாயகன் விருது வென்று கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் அதன்பின் சரிவை சந்தித்தார். இருப்பினும் இடையிடையே 50, 70 போன்ற நல்ல ரன்களை எடுத்து பொறுப்புடன் செயல்பட்ட அவர் சதமடிக்கவில்லை என்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார். அதனால் பெஞ்சில் அமர வைத்திருந்த சென்னை நிர்வாகமும் ஐபிஎல் தொடரிலிருந்து கழற்றி விட்ட நிலையில் இந்திய அணிக்கு மீண்டும் விளையாட வேறு வழி தெரியாத அவர் இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சதங்களையும் இரட்டை சதங்களையும் விளாசி இன்று அபார கம்பேக் கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் தமக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்த ஐபிஎல் தொடரை புறக்கணித்த காரணத்தாலேயே புஜாரா இன்று இந்திய அணியில் உள்ளார். ஏனெனில் அவரது பாதையை தேர்வு செய்யாத மற்றொரு நட்சத்திரம் அஜிங்கிய ரகானே ஐபிஎல் பாதையை தேர்வு செய்து அதிலும் அசத்த முடியாமல் இந்திய அணிக்கும் திரும்ப முடியாமல் திண்டாடுகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடர் நமக்கு செட்டாகாது என்பதை உணர்ந்து அதற்கு மொத்தமாக புஜாரா முழுக்கு போட்டு விட்டதாக தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அதுவே அவரது கம் பேக் வெற்றியின் ரகசியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அவரிடம் எந்த ஆர்வமும் இல்லை. அதில் வெற்றி காண்பதற்கு கடந்த பல வருடங்களாக முயற்சித்த அவர் இந்த கோப்பையில் நம்மால் தேநீரை சுவைக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளார். அதனால் இங்கிலாந்துக்கு பயணித்த அவர் தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டார். இந்த சமயத்தில் அவரது வாழ்வில் தன்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை”

“மாறாக இது அவரது வாழ்வில் மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டிய நேரமாகும். சொல்லப்போனால் அவர் இவ்வாறு பேட்டிங் செய்வதை தான் ரசிகர்களும் அதிகமாக விரும்புகிறார்கள். எனவே தன்னுடைய கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொண்ட அவர் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பவில்லை. பொதுவாக ஒரு போட்டியில் நீங்கள் வெல்லவில்லை என்றால் அடுத்த போட்டியை நோக்கி நகர வேண்டும். அதை புஜாரா சரியாக செய்துள்ளார்” என்று பாராட்டினார்.

இதையும் படிங்க: வீடியோ : ஓவர் படம் உடம்புக்கு ஆகாது, ஆண்டர்சன்னு நினைப்பா? தேவையின்றி வம்பிழுத்த இந்திய வீரரை கண்டிக்கும் ரசிகர்கள்

அவர் கூறுவது போல ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தால் மீண்டும் ஏதேனும் ஒரு அணியில் பெஞ்சில் தான் அமர்ந்து அதிகபட்சமாக நட்சத்திர வீரர்களுடன் வலை பயிற்சி செய்யும் வாய்ப்பை மட்டுமே பெற்றிருக்க முடியும். ஆனால் நிதர்சனத்தை புரிந்து கொண்டு 2023 ஐபிஎல் தொடரிலிருந்தும் மொத்தமாக வெளியே வந்ததால் தற்போது இந்திய அணிக்குள் புஜாரா மீண்டும் வந்துள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

- Advertisement -
Published by