ஓவர் படம் உடம்புக்கு ஆகாது, ஆண்டர்சன்னு நினைப்பா? தேவையின்றி வம்பிழுத்த இந்திய வீரரை கண்டிக்கும் ரசிகர்கள்

Mohammed Siraj Sledging
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்த இந்தியா அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரின் முதல் போட்டிகள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 82, அஷ்வின் 58 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் மற்றும் மெஹந்தி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் முதல் பந்திலிருந்தே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது.

அதிகபட்சமாக அனுபவ வீரர் முஸ்பிகர் ரஹீம் 28 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா புஜாரா 102*, சுப்மன் கில் 110 என முக்கிய வீரர்களின் சதங்களால் 258/2 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இறுதியில் 513 ரன்களை துரத்தும் வங்கதேச அணிக்கு 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்த சாண்டோ 67 ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் அறிமுகப் போட்டியிலே சதமடித்து 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஓவர் ஸ்லெட்ஜிங் எதற்கு:

இருப்பினும் அடுத்து வந்த யாசிர் அலி 5, லிட்டன் தாஸ் 19, ரஹீம் 23 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் கேப்டன் சாகிப் அல் ஹசன் 40* ரன்களும் மெஹதி ஹசன் 9* ரன்களும் எடுத்த போது 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது அந்த அணி 272/6 ரன்களை எடுத்துள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு கடைசி நாளில் 4 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. முன்னதாக இப்போட்டியில் 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்ன்ர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த வங்கதேச ஓப்பனிங் ஜோடியை எப்படியாவது உடைக்க இந்திய பவுலர்கள் போராடினார்கள்.

அதில் நஜ்முல் சாண்டோவை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு பந்தை வீசி விட்டு வேண்டுமென்றே சில வார்த்தைகளை பேசி ஸ்லெட்ஜிங் செய்தார். முன்னதாக முதல் இன்னிங்ஸில் நட்சத்திர வீரர் லிட்டன் தாஸை இதே போல் ஸ்லெட்ஜிங் செய்த அவர் அடுத்த பந்திலேயே வெற்றிகரமாக அவுட் செய்து மிரட்டினார். ஆனால் லிட்டன் தான் செய்த தவறை செய்யாத சாண்டோ கவனத்தை சிதற விடாமல் அடுத்த பந்தில் சுதாரிப்புடன் செயல்பட்டார். குறிப்பாக கோபப்பட்டால் விக்கெட்டை விட்டு விடுவோம் என்ற மன உறுதியுடன் நின்ற அவர் “இதெல்லாம் நமக்கு எதற்கு” என்ற வகையில் சிரித்த முகத்துடன் சிராஜுக்கு பதிலடி கொடுத்து இறுதியில் 67 ரன்கள் குவித்து உமேஷ் யாதவிடம் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த வகையில் ஸ்லெட்ஜிங் வலையில் சிக்காமல் சிரிப்பை பதிலடியாக கொடுத்து வெற்றிகரமாக 67 ரன்கள் குவித்து அசத்திய சாண்டோ ரசிகர்களின் பாராட்டுகளை பெறுகிறார். ஆனால் எல்லா நேரமும் ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை எடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் தேவையின்றி வார்த்தைகளை பிரயோகித்த முகமது சிராஜை நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். குறிப்பாக முதல் இன்னிங்ஸை விட 2வது இன்னிங்ஸில் அவரது பவுலிங் சுமாராக இருந்தது.

எனவே அதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு எப்படியாவது ஸ்லெட்சிங் செய்து விக்கெட்டை எடுத்து விடலாம் என்பதில் கவனம் செலுத்துவது சரியல்ல என்று தெரிவிக்கும் ரசிகர்கள் ஓவர் படம் உடம்புக்கும் கேரியருக்கும் ஒத்து வராது என்றும் அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க: வீடியோ : விராட் கோலியின் தவறை சரி செய்து தோனி ஸ்டைலில் ஸ்டம்பிங் செய்து அசத்திய ரிஷப் பண்ட் – விவரம் இதோ

அதிலும் ஒரு முறை ஸ்லெட்ஜிங் செய்து வெற்றி கண்டதற்காக ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் அதையே செய்ய அதிக விக்கெட்களை எடுத்து சாதனை படைத்த இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்று உங்களது மனதில் நினைப்பா? என்ற வகையில் நிறைய ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement