ஹார்டிக் பாண்டியாவிற்கு எப்போது இந்திய அணியில் இடம்? வெளிப்படையாக உண்மையை சொன்ன – சேத்தன் சர்மா

Chetan
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வந்த இளம் வீரர் ஹார்திக் பாண்டியா இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாத குறையைப் போக்கினார். கடந்த 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக 63 ஒருநாள் போட்டிகள், 11 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

pandya

- Advertisement -

பின்வரிசையில் களமிறங்கி பேட்டிங்கில் தனது அதிரடியை காட்டுவது மட்டுமின்றி பந்து வீச்சிலும் சிறப்பாக கை கொடுக்க கூடிய இவர் தனது சிறப்பான பங்களிப்பினை இந்திய அணிக்கு தொடர்ந்து வழங்கவே இவரது மதிப்பு இந்திய அணியில் நாளுக்கு நாள் அதிகரித்தது. அறிமுகமான சில ஆண்டுகளிலேயே இந்திய அணியின் முக்கிய வீரராக மாறிய ஹர்திக் பாண்டியா தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத்தை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அளவிற்கு இவரது கிரிக்கெட் கரியர் பெரிய ஏற்றம் கண்டுள்ளது.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே காயம் ஏற்பட்டதன் காரணமாக பந்துவீசாமல் இருந்து வரும் பாண்டியா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். மேலும் தானாக முன்வந்து தான் உடற்தகுதி பெறும் வரை தனக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பாண்டியா தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

pandya 3

இருப்பினும் அவருக்கு இதுவரை இந்திய அணியில் மீண்டும் இணையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா இந்திய அணியில் மீண்டும் அவருக்கு எப்போது வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர் :

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரர்களில் பாண்டியாவும் ஒருவர். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்திய அணியில் விளையாடாமல் உள்ளார். இதன் காரணமாக அவரது உடல் தகுதியில் நாங்கள் முழு திருப்தி அடையும் வரை அவரால் இந்திய அணிக்கு விளையாட முடியாது. நிச்சயம் அவர் 100% உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவர் இந்திய அணியில் இணைக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என சேத்தன் சர்மா வெளிப்படையான உண்மையை கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தனது துவக்க வீரர் இடத்தினை இளம் வீரருக்காக விட்டுக்கொடுத்த ரோஹித் சர்மா – 3 ஆவது போட்டியில் மாற்றம்

இதன் காரணமாக அடுத்து வரும் சில தொடர்களிலும் பாண்டியா விளையாடுவது கஷ்டம் என்று தோன்றுகிறது. மேலும் உலக கோப்பை இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இருக்கும் என்று தெரிகிறது.

Advertisement