நாங்க சொல்ற பேச்சை அவர் கேக்குறதே கிடையாது. அவருக்கு அணியில் இடமில்லை – சேத்தன் சர்மா விளாசல்

Chetan-1
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா பங்கேற்க உள்ளது. வரும் பிப்ரவரி 24ஆம் தேதி துவங்க உள்ள இந்த சுற்றுப் பயணத்துக்கான 18 பேர் கொண்ட இந்திய டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த மாதம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி திடீரென அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மா நியமிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு உதவி புரியும் வண்ணம் துணை கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

IND

- Advertisement -

சீனியர்களுக்கு குட் பை:
இலங்கை டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பிரியங் பஞ்சல், சௌரப் குமார் ஆகிய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவை அனைத்தையும் விட கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் திண்டாடி வரும் இந்தியாவின் அனுபவ வீரர்களான செடேஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பின் முதல் முறையாக இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா மற்றும் அனுபவ விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா ஆகியோரும் இந்த அணியில் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

pujara 1

ஏற்கனவே இவர்கள் அனைவரும் பார்மில்லாமல் திண்டாடி வருவதுடன் இவர்களின் வயதை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைக்கும் வண்ணம் இந்திய தேர்வு குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

ஹர்டிக் பாண்டியா:
இவர்களை போலவே காயத்திலிருந்து குணமடைந்த போதிலும் பந்து வீசுவதற்கு மறுப்பு தெரிவித்து வரும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த டி20 உலக கோப்பை 2021 தொடருக்கான இந்திய அணியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா அதில் முழுமையாக பந்து வீசாத காரணத்தால் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டு அடுத்தடுத்த படுதோல்விகளை பரிசளித்தது. அதனால் கடுப்பான இந்திய தேர்வு குழுவினர் இனி பந்து வீசினால் மட்டுமே அவருக்கு இந்திய அணியில் இடம் என்று கறாராக தெரிவித்திருந்தார்கள்.

Pandya-2

இந்நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படாதது ஏன் என்ற செய்தியாளரின் கேள்விக்கு சேத்தன் சர்மா பதிலளித்தது பின்வருமாறு. “இதை நீங்கள் ஹர்திக் பாண்டியாவிடம் தான் கேட்கவேண்டும். உங்களிடம் அவரின் போன் நம்பர் இருக்கும் என நினைக்கிறேன். அத்துடன் அவர் ஐபிஎல் தொடரில் ரன்கள் எடுத்துள்ளார் என்பதால் அவரை தேர்வு செய்யுங்கள் என கூறும் அளவுக்கு நீங்கள் ஒன்றும் தேர்வுகுழு உறுப்பினர் கிடையாது. எனவே யாரை தேர்வு செய்ய வேண்டும் யாரை தேர்வு செய்யக்கூடாது என்பது உங்களின் வேலை அல்ல, அது எங்களின் முடிவாகும். ஒரு வீரருக்கு ஆதரவு கொடுங்கள். ஆனால் அவரை விமர்சனம் செய்யாதீர்கள். மேலும் இந்தியாவிற்காக ஹர்திக் பாண்டியா என்ன செய்துள்ளார் என்பதை யாரும் மறக்கவில்லை” என கூறியுள்ளார்.

- Advertisement -

ரஞ்சி கோப்பை என்னாச்சு:
இருப்பினும் அவரின் பேச்சை கேட்காத செய்தியாளர் மீண்டும் இந்திய அணியில் பாண்டியாவின் இடம் பற்றி கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த சேத்தன் சர்மா கூறியது பின்வருமாறு. “இங்கே பிரச்சனையை ஏற்படுத்தாதீர்கள். நான் ஏற்கனவே கூறியதை அலசிப் பாருங்கள், அதில் உங்களுக்கு தேவையான பதில் உள்ளது” என கோபத்துடன் பதிலளித்தார். ஐபிஎல் தொடரில் ரன்கள் அடித்தால் மட்டும் இந்திய அணியில் தேர்வாகி விட முடியாது என தெரிவித்துள்ள சேட்டன் சர்மா இனி இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டுமெனில் பந்து வீச்சிலும் கவனம் செலுத்தி முழு ஆல்-ரவுண்டராக விளையாடினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

pandya 1

அத்துடன் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடி அதில் சிறப்பாக செயல்பட்டு முழு பார்ம்க்கு திரும்பிய பின் இந்திய அணியில் மீண்டும் விளையாடுமாறு ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி வெளிப்படையாகவே கடந்த மாதம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அதை மதிக்காத ஹர்திக் பாண்டியா கங்குலியின் பேச்சை உதாசீனப்படுத்தும் வண்ணம் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் பங்கேற்காமல் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க : வெளுத்து வாங்கிய சூரியகுமார் மற்றும் வெங்கி ஐயர். கடைசி 6 ஓவரில் நிகழ்ந்த அற்புதம் – என்ன நடந்தது?

இதனால் அவர் மீது மேலும் கோபமடைந்துள்ள இந்திய தேர்வு குழுவினரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் அவருக்கு இப்போதைக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கக்கூடாது என முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 15 கோடிகளுக்கு கேப்டனாக விளையாடவுள்ள ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் விளையாட ஆர்வம் காட்டாதது இந்திய ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement