வெளுத்து வாங்கிய சூரியகுமார் மற்றும் வெங்கி ஐயர். கடைசி 6 ஓவரில் நிகழ்ந்த அற்புதம் – என்ன நடந்தது?

venky
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி டி20 போட்டியானது தற்போது கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 போட்டியிலும் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

INDvsWI

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கிய வேளையில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் 8 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களும், இஷன் கிஷன் 25 ரன்களும், கேப்டன் ரோகித் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இருந்து வெளியேற இந்திய அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இந்திய அணி 160 ரன்களை தொடுவதே சவாலான நிலையாக மாறியது.

venky 1

இந்நிலையில் அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஜோடி கடைசி 6 ஓவரில் போட்டியை தலைகீழாக திருப்பினர். இருவரும் இணைந்து 37 பந்துகளை சந்தித்த வேளையில் 91 ரன்கள் குவித்து மிகப்பெரிய பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வேளையில் ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் இறுதிவரை களத்தில் இருந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளை சந்தித்த நிலையில் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்சர் என 65 ரன்கள் அடித்தார். அதேபோன்று வெங்கடேஷ் ஐயர் 19 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி 2 சிக்சர்கள் என 35 ரன்கள் குவிக்க பெரிய ரன் குவிப்பிற்கு இந்திய அணி சென்றது.

- Advertisement -

இந்த இருவருமே கொல்கத்தா மைதானத்தின் பவுண்டரிகளை தங்களது பேட்டின் மூலம் சுற்றிக் காண்பித்தனர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் அற்புதமான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தினர். கடைசி 5 ஓவர்களில் இவர்கள் இருவரும் இணைந்து அமைத்த சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்களை குவித்தது. அதனைத் தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க : கங்குலி ஓகே சொல்றாரு. ஆனா டிராவிட் என்னை புறக்கணிச்சிட்டாரு – புலம்பும் சீனியர் வீரர்

இந்த போட்டியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரது ஜோடி கடைசி 5 ஓவர்களில் 86 ரன்களை விளாசியதன் மூலமாக இந்திய அணி பலமான முன்னிலை பெற்றது. அதோடு இந்திய அணி டெத் ஓவர்களில் அதாவது 16 ஓவர்களில் இருந்து 20 ஓவர் வரை பேட்டிங் செய்ததில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இன்றைய போட்டியில் அவர்கள் அடித்த 86 ரன்கள் சாதனையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement