பிசிசிஐ வாய்ப்பு கொடுத்தும் அதிரடி முடிவை எடுத்த சேட்டன் சர்மா – வெளியான புதிய செய்தி இதோ

Chetan-1
- Advertisement -

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா சில தினங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் பதிவு செய்யப்படுகிறோம் என்பது தெரியாமலேயே இந்திய கிரிக்கெட்டில் பின்புலத்தில் நடைபெறும் சில குளறுபடியான நிகழ்வுகளை வெளிப்படையாக பேசி சிக்கியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக விராட் கோலி மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி ஆகியோருக்கிடையே சண்டை என்று வந்த செய்திகளை உண்மையாக்கும் வகையில் அவர் பேசியது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் பிசிசிஐயில் நடைபெறும் சில குளறுபடியான முடிவுகளுக்கு விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனால் கங்குலியிடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சனையில் அவருடைய ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை பறித்ததாகவும் அவர் கூறினார்.

CHetan Sharma

- Advertisement -

அத்துடன் பெரும்பாலான வீரர்கள் முழுமையாக குணமடையாத போதிலும் இந்தியாவுக்காக முக்கிய போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்காக வலி நிவாரணி ஊசிகளை போட்டுக் கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தது இந்திய அணியின் உண்மை தன்மையில் பெரிய கேள்வியை எழுப்பியது. மேலும் இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்படுவது பற்றி ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அடிக்கடி தமது வீட்டுக்கு வந்து பேசுவார்கள் என்றும் அவர் அடுத்தடுத்த உண்மைகளை உளறினார். அவரது அடுத்தடுத்த பேச்சுகள் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது பற்றி பிசிசிஐ விசாரிக்கும் என்ற செய்திகள் வெளியானது.

வெளியேறிய சேட்டன்:
இந்நிலையில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் உண்மை தன்மையை விளக்குமாறு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்கள் சேட்டன் சர்மாவிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் அதை செய்ய மறுத்த சேட்டன் சர்மா நேரடியாக இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை ஜெய் ஷா அவர்களுக்கு அனுப்பி உள்ளதாக புதிய செய்திகள் வெளியாகியுள்ளது. இது பற்றி வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு.

chetan-sharma

“பிசிசிஐ தலைமை தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதைப் பற்றிய கடிதத்தை அவர் நேரடியாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அவரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பிசிசிஐ இறுதியாக ஒரு வாய்ப்பு கொடுத்தும் அதை ஏற்றுக்கொள்ளாத சேட்டன் சர்மா அதிரடியாக தாமாக பதவி விலகியுள்ளது தெரிகிறது. இதனால் நிச்சயமாக தனது மீது தவறு இருந்த காரணத்தாலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

- Advertisement -

முன்னதாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வி சந்திப்பதற்கு அவர் தலைமையிலான தேர்வு குழுவினர் எடுத்த குளறுபடியான முடிவுகள் முக்கிய காரணமாக அமைந்ததால் ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பலைகள் உருவாகின. அப்போது ரசிகர்களின் கண் துடைப்பதற்காக முதலில் சேட்டன் சர்மா தலைமையான தேர்வு குழு கூண்டோடு நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் தேர்வு குழுவில் இடம் வகிக்கும் உறுப்பினர்களை மட்டும் நீக்கிய பிசிசிஐ தலைவராக மீண்டும் அவரையே நியமித்தது பல ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது.

Chetan Sharma

இதையும் படிங்க: மேட்ச் ஆரம்பிச்ச 2 மணி நேரத்துலயே கும்ப்ளேவின் சாதனையை நெருங்கிய அஷ்வின் – ஈவ்னிங் ரெக்கார்டு கன்பார்ம்
அதனால் இந்த முடிவால் இந்திய கிரிக்கெட் சர்வை நோக்கி செல்லுமே தவிர எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்று அப்போதே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். தற்போது எதிர்பார்த்தது போலவே அந்த முடிவு இந்திய அணிக்கு ஒரு கரையை ஏற்படும் முடிவாகவே அமைந்தது. மொத்தத்தில் இனிமேலாவது தரமான தேர்வு குழு தலைவரை தேர்வு செய்யுமாறு பிசிசிஐயை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement