மேட்ச் ஆரம்பிச்ச 2 மணி நேரத்துலயே கும்ப்ளேவின் சாதனையை நெருங்கிய அஷ்வின் – ஈவ்னிங் ரெக்கார்டு கன்பார்ம்

Ashwin-and-Kumble
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 25 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் குவித்துள்ளது.

Rohit-Toss

- Advertisement -

இந்த போட்டியில் வார்னர் மற்றும் கவாஜா ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்கு எதிராக நிதானமான ஆட்டத்தை கையாண்டதால் சற்று சீராக ரன்களை குவித்து வந்தனர். அப்போது ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 50 ரன்களை தொட்டிருந்த வேளையில் 15 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னரை முகமது ஷமி ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார். இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை காப்பாற்ற வேண்டுமெனில் இவர்கள் இருவரால் தான் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட லாபுஷேன் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் தமிழக வீரரான அஸ்வின் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.

அப்போது உணவு இடைவேளையின் சமயத்தில் அந்த அணியின் துவக்க வீரரான உஸ்மான் கவாஜா 50 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டி ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே 10 ஓவர்களை வீசிய அஸ்வின் மூன்று மெய்டன் ஓவர்களுடன் 29 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Marnus Labuschange Ravichandran Ashwin

தமிழக வீரரான அஸ்வின் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகளை அடுத்தடுத்து தகர்த்து வரும் வேளையில் தற்போது அணில் கும்ப்ளேவின் மற்றும் ஒரு சாதனையை தகர்க்க அவர் காத்திருக்கிறார். அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது வரை முதல் இன்னிங்சில் அவர் எடுத்துள்ள இந்த இரண்டு விக்கெட்டுகளின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 20 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இன்னும் அவர் இந்த முதல் இன்னிங்சின் முதல் நாள் ஆட்டத்தில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிவிரைவாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை கும்ப்ளே-விடமிருந்து பறிப்பார். அதுமட்டும் இன்றி ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அணில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளுடன் தன்வசம் வைத்துள்ளார்.

இதையும் படிங்க : 100 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் முன் இந்திய வீரர்கள் அளித்த மரியாதை – பி.சி.சி.ஐ பகிர்ந்த வீடியோ

இன்னும் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்ஸ் எஞ்சியுள்ளதால் இந்த தொடரிலேயே கும்ப்ளேவின் இந்த சாதனையையும் அஸ்வின் தகர்த்து விடுவார். அதே வேளையில் இன்று மாலைக்குள் நிச்சயம் அஸ்வின் ஒரு விக்கெட்டை எடுக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement