100 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் முன் இந்திய வீரர்கள் அளித்த மரியாதை – பி.சி.சி.ஐ பகிர்ந்த வீடியோ

Pujara
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கு நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லியில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி தற்போது ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி துவங்கும் முன்னர் இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாராவிற்கு இந்த போட்டி நூறாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக அமைந்துள்ளதால் அவருக்கு சிறிய பாராட்டு விழா நடைபெற்றது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் சத்தீஷ்வர் புஜாராவிற்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் நூறாவது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியினை வழங்கி அவரை கௌரவித்தார். அதோடு மைதானத்தில் இருந்த ரசிகர்களும் கைதட்டி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வீரர்கள் மைதானத்திற்கு நுழையும் முன்னர் சத்தீஷ்வர் புஜாராவை வரவேற்கும் விதமாக இருபுறமும் அரணாக நின்று அவருக்கு கௌரவ வரவேற்பினை அளித்தனர். அதேபோன்று எப்பொழுதுமே வீரர்கள் மீட்டிங்கில் பேசும் கேப்டன் இன்று புஜாராவை சிறிய உரையாடல் நிகழ்த்த அழைத்தார்.

- Advertisement -

அதன்படி புஜாராவும் வீரர்களின் மத்தியில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் புஜாரா முன் செல்ல வீரர்கள் அனைவரும் அவருக்கு பின்னே சென்றனர். அதேபோன்று நூறாவது போட்டியில் விளையாடும் புஜாராவை இந்திய வீரர்கள் அனைவரும் கட்டி அணைத்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டது பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது. இப்படி இந்திய அணியின் வீரர்கள் புஜாராவிற்கு அளித்த மரியாதையை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : சின்ன வயசுல நான் கண்ட கனவு இதுதான். 100 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன் புஜாரா – பகிர்ந்துகொண்ட சுவாரசியம்

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி சார்பாக 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 13-வது வீரராக புஜாரா இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான புஜாரா இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7021 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement