சின்ன வயசுல நான் கண்ட கனவு இதுதான். 100 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன் புஜாரா – பகிர்ந்துகொண்ட சுவாரசியம்

Pujara
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா கடந்த 2010-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி நாக்பூரில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார். இந்நிலையில் இன்று பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கி இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அவரது 100-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக அமைந்துள்ளது.

Pujara 1

- Advertisement -

இந்த போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்களில் நூறாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 13-வது வீரராக புஜாரா இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ராகுல் டிராவிட் இந்திய அணியில் இருந்து வெளியேறிய பிறகு அந்த இடத்தை கணக்கச்சிதமாக நிரப்பிய புஜாரா இதுவரை 99 டெஸ்ட் போட்டியில் விளையாடி 7021 ரன்களை 44 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று தனது 100-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள புஜாராவிற்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் அவருக்கு 100-ஆவது டெஸ்ட் போட்டிக்கான (கேப்) தொப்பியினை வழங்கி கௌரவித்தார். இந்த கௌரவிப்பு நிகழ்ச்சியின் போது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி புஜாராவின் இந்த சாதனைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Pujara 2

அதனைத் தொடர்ந்து தனது நூறாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசிய புஜாரா கூறுகையில் : உங்களிடம் இருந்து இந்த தொப்பியை பெற்றதில் பெருமையாக உணர்கிறேன். உங்களைப் போன்ற ஜாம்பவானை பார்த்து தான் நான் கிரிக்கெட் விளையாட விருப்பப்பட்டேன். என்னுடைய சிறு வயதில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு மிகப்பெரிய கனவாக இருந்தது.

- Advertisement -

ஆனால் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெறுவேன் என்றெல்லாம் நினைத்து கூட பார்த்தது கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட் என்னை பொறுத்தவரை மிகச் சிறப்பான ஒரு ஃபார்மேட். இனிவரும் இளம் வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கடுமையாக உழைக்க வேண்டும்.

இதையும் படிங்க : IND vs AUS : எதிர்பார்த்தது போலவே 2 ஆவது போட்டியில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்த – ரோஹித் சர்மா

என்னுடைய இந்த பயணத்திற்கு உதவி செய்த என்னுடைய மனைவி, குடும்பம், சக வீரர்கள், நண்பர்கள், பிசிசிஐ, ரசிகர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் எனது நன்றி. நீங்கள் அளித்த ஆதரவு இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் பல்வேறு கருத்துக்களை புஜாரா பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement