IND vs AUS : எதிர்பார்த்தது போலவே 2 ஆவது போட்டியில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்த – ரோஹித் சர்மா

Rohit-Toss
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று வெள்ளிக்கிழமை பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கியது.

கடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் மிடில் ஆர்டரில் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் இன்றைய போட்டியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அணியில் ஒரு முக்கிய மாற்றத்தை கேப்டன் ரோகித் சர்மா கொண்டு வந்தார்.

Shreyas Iyer

அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டியை காயம் காரணமாக தவறவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் இணைந்ததால் அவர் நேரடியாக அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களாக டெல்லி வந்து பயிற்சியினை மேற்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் நேரடியாக அணியில் விளையாடுவார் என்று பயிற்சியாளர் டிராவிட் கூறியிருந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் நேரடியாக இடம் பெற்றுள்ளார். அவரது வருகை காரணமாக சூரியகுமார் யாதவ் தனது இடத்தை இழந்துள்ளார். அதனை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அவருக்கு கிழே விளையாடுவது பவுலர்களுக்கு சொர்க்கம் மாதிரி – முன்னாள் இந்திய கேப்டனை பாராட்டிய பிரக்யான் ஓஜா

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) கே.எஸ்.பரத், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) அக்சர் படேல், 10) முகமது ஷமி, 11) முகமது சிராஜ்.

Advertisement