அவருக்கு கிழே விளையாடுவது பவுலர்களுக்கு சொர்க்கம் மாதிரி – முன்னாள் இந்திய கேப்டனை பாராட்டிய பிரக்யான் ஓஜா

Pragyan Ojha
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி உலகிலேயே 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக மகத்தான உலக சாதனை படைத்தவர். அதே போல் 2010இல் இந்தியாவை ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாகவும் தரம் உயர்த்திய அவர் மிகச் சிறந்த ஃபினிஷராகவும் இப்போதைய இந்திய அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பளித்து வளர்த்து சிறப்பான வருங்காலத்தை கட்டமைத்த நல்ல தலைவனாகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அப்படி பன்முகத் திறமை கொண்ட கொண்ட தோனி கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்கள் ஒரு இன்ச் காலை வெளியே தூக்கினாலும் மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்வதில் கில்லாடி என்றே சொல்லலாம்.

ashwin 1

- Advertisement -

அதனாலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்த கீப்பராக உலக சாதனை படைத்து மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் கேப்டனாக கருதப்படும் அவரது தலைமையில் விளையாடுவதற்கு அனைத்து வீரர்களும் குறிப்பாக பந்து வீச்சாளர்கள் மிகவும் விரும்புவார்கள். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் என்ன நினைப்பார்கள் எந்த இடத்தில் அடிப்பார்கள் என்பதை விக்கெட் கீப்பராக இருந்து பார்த்து பார்த்து பழகிய அவர் குறிப்பிட்ட சில காலத்திற்குப் பின் அந்த அனுபவத்தால் சரியான இடங்களில் பீல்டர்களை நிறுத்தி அதற்கேற்றார் போல் பவுலர்களை பந்து வீசுமாறு சொல்லி பலமுறை அவுட்டாக்கியதை ரசிகர்களால் மறக்கவே முடியாது.

சொர்க்கமான கேப்டன்:
மேலும் ஸ்பின்னர்கள் எதிரணியிடம் அடி வாங்கும் போது அவர்களது அருகே சென்று எப்படி பந்து வீச வேண்டும் என்று பலமுறை சொல்லிக் கொடுத்த அவர் ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் இன்று இந்தளவுக்கு ஜொலிப்பதற்கு முக்கிய காரணமானவர் என்றால் மிகையாகாது. அத்துடன் தோனி ஓய்வு பெற்ற பின் அவரைப் போல் ஆலோசனை வழங்கும் விக்கெட் கீப்பர் கேப்டன் இல்லாமல் 2019க்குப்பின் தங்களது இடத்தை இழந்த சஹால் – குல்தீப் யாதவ் ஆகியோர் அவரை அதிகமாக மிஸ் செய்வதாக வெளிப்படையாக பேட்டியளித்திருந்தனர்.

Chahal

அந்த வகையில் எம்எஸ் தோனி பந்து வீச்சாளர்களின் கேப்டன் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா அவரது தலைமையில் விளையாடும் போது பீல்டிங் செய்வது போன்ற எந்த கவலையும் இல்லாமல் விளையாடியதாக கூறியுள்ளார். ஏனெனில் அனைத்து வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வார் என்பதால் அவரது தலைமையில் விளையாடுவது சொர்க்கம் போன்றது என தெரிவிக்கும் ஓஜா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் அனைத்தையும் எளிமையாக கையாண்டார் என்று நினைக்கிறேன். பொதுவாக அவரது தலைமையில் விளையாடிய ஸ்பின்னர்கள் அவரது ஆலோசனைகளை பின்பற்றி மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏனெனில் அவர் எங்களுடைய வேலைகளை மிகவும் எளிதாக்கி விடுவார். பொதுவாக ஒரு பவுலராக நீங்கள் மைதானத்தின் சூழ்நிலைகளையும் பேட்ஸ்மேன் எவ்வாறு அடிப்பார் என்பதையும் எப்படி பீல்டிங் செட் செய்ய வேண்டும் என்பதையும் நினைக்க வேண்டும்”

Ojha

“ஆனால் பீல்டர்களை நிறுத்துவது முதல் பிட்ச் எப்படி இருக்கும் என்பது அவரை அனைத்து விஷயங்களிலும் அவர் எங்களுக்கு உதவுவார். அது தான் அவரது தலைமையில் விளையாடும் பவுலர்கள் மிகவும் குறைந்த பாரத்துடன் மகிழ்ச்சியுடன் விளையாடுவதை போன்ற உணர்வை பெறுவதற்கு முக்கிய காரணமாகும். நானும் அவ்வாறு தான் அவரது தலைமையில் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். அதை விட போட்டியில் எந்த சூழ்நிலையிலும் அழுத்தம் என்பது எங்கள் மீது வராத அளவுக்கு தோனி பார்த்துக் கொள்வார். அது எனக்கு பலமுறை உதவியுள்ளது”

இதையும் படிங்க: நான் உங்களுக்கு குடுக்குற அட்வைஸ் இதுதான். போயி கண்ணாடில உங்க முகத்தை பாருங்க – ரவி சாஸ்திரி விளாசல்

“அவரைப் போன்றவர் கேப்டனாக இருக்கும் போது நீங்கள் இளம் வீரராக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அழுத்தம் ஏற்படாது. அது போன்ற ஆலோசனைகள் உங்களுக்கு அதிகமாக உதவி செய்யும்” என்று கூறினார். முன்னதாக தோனி தலைமையில் அறிமுகமான பிரக்யா ஓஜா தன்னுடைய 24 டெஸ்ட் போட்டிகளையும் வேறொரு கேப்டன் தலைமையில் அல்லாமல் அவரது தலைமையிலேயே விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement