நான் உங்களுக்கு குடுக்குற அட்வைஸ் இதுதான். போயி கண்ணாடில உங்க முகத்தை பாருங்க – ரவி சாஸ்திரி விளாசல்

Ravi-Shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அளித்துள்ள அட்வைஸ் ஒன்று தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்கள் குவித்தது அந்த அணியின் மோசமான செயல்பாட்டை அப்பட்டமாக வெளிக்காட்டி இருந்தது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தங்களது பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அப்படி இல்லையெனில் இந்திய அணி இந்த தொடரை எளிதாக கைப்பற்றும் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது குறித்து பேட்டியளித்துள்ள ரவி சாஸ்திரி கூறுகையில் : ஆஸ்திரேலியா அணிக்கு நான் கொடுக்கும் முக்கிய அட்வைஸ் இதுதான்.

நீங்கள் இந்திய அணிக்கு எதிராக மீண்டும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமெனில் பழைய ஆஸ்திரேலிய அணி போல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். டெல்லியில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் நான் உங்களை அவ்வாறு காண விரும்புகிறேன். உங்களுடைய திறன் மற்றும் இன்டெண்ட் ஆகியவை திரும்ப வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

IND vs AUS Siraj SMith

அதேபோன்று ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு நான் கூற விரும்புவது இது ஒன்றுதான். இந்திய வீரர்களை ஐபிஎல் நண்பர்களாக பார்க்காமல் கண்ணாடியில் உங்கள் முகத்தை பாருங்கள். நீங்கள் ஆஸ்திரேலியா வீரர்களாக முதலில் உணருங்கள். அப்போதுதான் இந்திய அணிக்கு எதிராக உங்களால் ஆக்ரோஷமான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும்.

- Advertisement -

நிச்சயம் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு கடுமையான போட்டி அளிக்கும் விதமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நடைபெற்று முடிந்த நாக்பூர் போட்டியிலிருந்து சில பாசிட்டிவான விடயங்களை எடுத்து உங்களது இயல்பான ஆட்டத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துங்கள் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நீங்க சொல்ற மாதிரிலாம் எங்களால் விளையாட முடியாது. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த – ஆஸி கேப்டன்

ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் வேளையில் ரவி சாஸ்திரியின் இந்த கருத்து கூடுதலாக ஆஸ்திரேலியா அணியை தாக்கி பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement