நீங்க சொல்ற மாதிரிலாம் எங்களால் விளையாட முடியாது. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த – ஆஸி கேப்டன்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஏகப்பட்ட விவாதங்கள் இந்த தொடரை முன்வைத்து நடந்து கொண்டிருந்த வேளையில் நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்ததும் இந்த விவாதங்கள் இன்னும் சமூக வலைதளத்தில் சூடு பிடித்தன.

IND vs AUS

- Advertisement -

ஏனெனில் ஒரு பக்கம் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் இந்த நாக்பூர் மைதானத்தில் குறை இருக்கிறது என்று குற்றச்சாட்டினை முன்வைக்க அதேவேளையில் ரோகித் சர்மா மைதானங்களை குறை கூறாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள் என்று ஆஸ்திரேலியா வீரர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலடி கொடுத்தார். அதனை தொடர்ந்து ஏகப்பட்ட விவாதங்கள் இந்த டெஸ்ட் தொடர் குறித்து நிலவி வருகிறது.

இவ்வேளையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பலரும் ஆஸ்திரேலியா அணியை கடுமையாக தாக்கி சில கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அதன்படி ஆலன்பாடர் வெளியிட்டிருந்த கருத்து ஒன்றில் : இந்திய பவுலர்களை நோக்கி ஸ்டீவ் ஸ்மித் தம்சப் காட்டியது தவறு என்று கூறியிருந்தார். அதேபோன்று மார்க் வாக் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோர் ஆஸ்திரேலிய அணி தேர்வு தவறு என்று விமர்சித்து இருந்தார்கள். மேலும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூட ஆஸ்திரேலியா அணி ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

Pat Cummins

இப்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏகப்பட்ட கருத்துக்கள் நிலவிவரும் வேளையில் தற்போது இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு தான். இந்த விளையாட்டினை நாம் வேடிக்கையாக அணுகி விளையாடும் போது சிறந்தவர்களாக இருக்கிறோம்.

- Advertisement -

நாங்கள் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடுவதை விரும்புகிறோம். 15 ஆட்டத்தில் வெற்றி பெறும் நாங்கள் ஒரு ஆட்டத்தில் தோற்றால் உடனே இப்படி செயல்பட வேண்டும், அப்படி செயல்பட வேண்டும் என்று பலரும் கருத்துக்களை சொல்கிறார்கள். நாங்கள் அதை எல்லாம் உள்வாங்கவில்லை என்று என்றும் எங்களுடைய ஆட்டத்தை தான் நாங்கள் விளையாட போகிறோம் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : அந்த ஒரு கோப்பைய மட்டும் ஜெயிச்சுட்டா என் கனவும் கேரியரும் முழுமையாகிடும் – 100வது போட்டிக்கு முன் புஜாரா பேட்டி

எங்கள் அணியில் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை கொண்டு வந்து விளையாடுவது நல்லது. ஏனெனில் அவர் ஐந்தாவது பந்துவீச்சாளருக்கான ஆப்ஷனையும் தருவார். அதே வேளையில் அவர் நல்ல பேட்ஸ்மேனும் என்பதனால் இரண்டு துறைகளிலுமே அணி பலமடையும். காயத்திலிருந்து மீண்டு வரும் அவர் தற்போது சரியான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நிச்சயம் அவரின் உடற்தகுதி எவ்வாறு இருக்கிறது என்பதை பார்த்து அணிக்குள் கொண்டு வருவோம் என்று கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement