அந்த ஒரு கோப்பைய மட்டும் ஜெயிச்சுட்டா என் கனவும் கேரியரும் முழுமையாகிடும் – 100வது போட்டிக்கு முன் புஜாரா பேட்டி

Pujara
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் வரும் ஜூலையில் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் அதிகப்படுத்தியுள்ள இந்தியா பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லியில் துவங்கும் 2வது போட்டியில் வென்று இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அந்த போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர சீனியர் வீரர் செட்டேஸ்வர் புஜாரா தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார்..pujarashot

கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை போலவே பெரும்பாலான போட்டிகளில் பொறுமையின் சிகரமாக களத்தில் நங்கூரமாக நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து பெரிய ரன்களை குவித்து வெற்றியை பெற்றுக் கொடுக்கும் யுத்தியை கடைப்பிடித்து வருகிறார். குறிப்பாக 2018/19இல் ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க 500+ ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் 2020/21 தொடரிலும் அதிக பந்துகளை எதிர்கொண்டு உடம்பில் அடிவாங்கி இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

ஒரே கனவு:
இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்ததால் கடந்த வருடம் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் மனம் தளராமல் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்து போராடி கம்பேக் கொடுத்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடும் 12வது இந்திய வீரராக சாதனை படைக்க உள்ளார். இந்நிலையில் 35 வயதாகும் புஜாரா ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்த நிலையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதே தம்முடைய மிகப்பெரிய கனவு என்று கூறியுள்ளார்.

Pujara County Hat Trick

2021இல் பைனல் வரை சென்றும் கோப்பையை வெல்ல முடியாத அவர் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலில் விளையாடுவது சந்தேகம் என்ற நிலைமையில் வரும் ஜூலையில் நடைபெறும் பைனலில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுப்பதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி 2வது போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டை நான் விளையாட துவங்கிய போதும் இந்தியாவுக்காக அறிமுகமான போதும் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. என்னைப் பொறுத்த வரை எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் சிறப்பாக செயல்படுவதே முக்கியமாகும்”

“அந்த வகையில் இத்தொடருக்கு முன்பாக தான் நான் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறேன் என்பதை தெரிந்து கொண்டேன். உங்களது கேரியரில் எப்போதும் மேடு பள்ளங்கள் இருந்தாலும் அதில் நீங்கள் போராடி முன்னேற வேண்டும். இதுவரை விளையாடியதில் மிகவும் திருப்தியுடன் 100வது போட்டியில் நான் ஆவலுடன் விளையாட காத்திருக்கிறேன். அதேசமயம் நாங்கள் இந்த முக்கிய தொடரில் அடுத்த போட்டியில் வென்று அதற்கடுத்த போட்டியிலும் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவோம் என்று நம்புகிறேன்”

- Advertisement -

Pujara

“டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் கோப்பையை இந்தியாவுக்கு வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய கனவாகும். கடந்த முறை அது நடைபெறவில்லை. இருப்பினும் இம்முறை நாங்கள் பைனலுக்கு தகுதி பெற்று அதை நோக்கி முன்னேற உள்ளோம். நான் 100 போட்டியில் விளையாடுவதற்கு என்னுடைய தந்தை மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளார்”

இதையும் படிங்க: 2 முக்கிய வீரர்களை கழட்டிவிட்டு 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வுசெய்த – வாசிம் ஜாபர்

“எனக்கு சிறுவயதிலிருந்தே அவர் நிறைய பயிற்சிகளை கொடுத்துள்ளார். அவரும் என்னுடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் நாளைய போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். ஒவ்வொரு வீரர்களின் வாழ்க்கையிலும் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் பயிற்சியாளர்களும் அதிக ஆதரவாக இருப்பார்கள். அந்த வகையில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Advertisement