2 முக்கிய வீரர்களை கழட்டிவிட்டு 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வுசெய்த – வாசிம் ஜாபர்

Wasim-Jaffer
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நாளை பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் இரண்டாவது போட்டியில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் சிலவற்றை குறிப்பிட்டு தனது பிளேயிங் லெவனை அவரது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி கடந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் கே.எல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அற்புதமான பார்மில் இருக்கும் சுப்மன் கில் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்றும் அவர் தனது பிளேயிங் லெவனில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று முதலாவது போட்டியில் காயம் காரணமாக இடம்பெறாத ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதால் சூரியகுமார் யாதவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற வேண்டும் என்றும் அவர் தனது மாற்றத்தை தெரிவித்துள்ளார். அதனை தவிர்த்து முதல் போட்டிகள் விளையாடிய அனைவருமே இந்த இரண்டாவது போட்டியில் இடம் பிடித்துள்ளனர். அதன்படி வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : யோகி பாபுவிற்கு தனது பேட்டினை பரிசளித்த தல தோனி. எதற்கு தெரியுமா? – விவரம் இதோ

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) கே.எஸ்.பரத், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) அக்சர் படேல், 10) முகமது ஷமி, 11) முகமது சிராஜ்.

Advertisement