யோகி பாபுவிற்கு தனது பேட்டினை பரிசளித்த தல தோனி. எதற்கு தெரியுமா? – விவரம் இதோ

Dhoni and Yogi Babu
- Advertisement -

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான யோகி பாபுவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனுமான மஹேந்திர சிங் தோனி தனது பேட்டினை பரிசாக வழங்கியிருப்பது தற்போது இணையத்தில் பெரியளவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான “லவ் டுடே”, “வாரிசு” போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இவ்வேளையில் அடுத்தடுத்து யோகி பாபு தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக “பொம்மை நாயகி” என்கிற ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதோடு ரஜினியின் “ஜெயிலர்”, சிவகார்த்திகேயனின் “அயலான்” போன்ற பல படங்களில் யோகி பாபு தொடர்ந்து நடித்து வருகிறார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி இன்னும் சில திரைப்படங்களில் இவர் கதாநாயகனாகவும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில் யோகி பாபு வெளியிட்டுள்ள அந்த பதிவில் : வலைப்பயிற்சியின் போது தோனி பயன்படுத்திய பேட் இது. நேரடியாக அவரது கைகளில் இருந்து எனக்கு வந்துள்ளது.

இந்த பேட்டினை பரிசாக அளித்த தோனி சாருக்கு நன்றி. உங்களது கிரிக்கெட் மற்றும் சினிமா ஆற்றலை எப்போதும் ரசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் நன்றி தோனி சார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தோனி வழங்கியுள்ள அந்த பேட்டில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

வாழ்த்துக்கள் யோகி பாபு என்று எழுதி அதில் தோனி கையொப்பமும் இட்டுள்ளார். எப்பொழுதுமே தமிழக ரசிகர்கள் மீது தனி பிரியம் கொண்ட தோனி தனது ஓய்வு முடிவினை கூட சென்னையில் தான் அறிவித்திருந்தார். அதுமட்டும் இன்றி தான் புதிதாக துவங்கியிருக்கும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் கூட ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ள தமிழ் படம் தான் என்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த தமிழ் படத்திலும் யோகி பாபு நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க : எங்கள மன்னிச்சுடுங்க, இந்தியாவுக்காக ஆஸ்திரேலியாவிடம் மன்னிப்பு கேட்ட ஐசிசி – காரணம் என்ன

பள்ளி பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவராக இருந்து வரும் யோகி பாபுவிற்கு சினிமா தவிர்த்து கிரிக்கெட் விளையாட மிகவும் பிடிக்கும் என்பதனாலே தோனி அவருக்கு இந்த பேட்டை பரிசளித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து யோகி பாபு வெளியிட்டுள்ள புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement