எங்கள மன்னிச்சுடுங்க, இந்தியாவுக்காக ஆஸ்திரேலியாவிடம் மன்னிப்பு கேட்ட ஐசிசி – காரணம் என்ன

ICC
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்ட அந்த அணி கடைசி 2 தொடர்களில் தங்களை வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை 2004க்குப்பின் முதல் முறையாக அவர்களது மண்ணில் தோற்கடித்து கோப்பையை வெல்லும் அமைப்புடன் களமிறங்கியது. ஆனால் ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்த அந்த அணியினர் வாயில் பேசியதை செயலில் கொஞ்சமும் வெளிப்படுத்தாமல் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தனர்.

அதனால் அவமானத்தை சந்தித்துள்ள அந்த அணி டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக பிப்ரவரி 15ஆம் தேதியான நேற்று மதியம் 3 மணியளவில் ஆஸ்திரேலியா நம்பர் ஒன் இடத்தை இழந்ததாகவும் இந்தியா உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறியதாக ஐசிசி அதிகாரபூர்வ இணையதளத்தில் தரவரிசை அப்டேட் செய்யப்பட்டது. குறிப்பாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த காரணத்தால் ஆஸ்திரேலியா வைத்திருந்த முன்னிலைப் புள்ளிகள் அப்படியே இந்தியாவின் பக்கம் சாய்ந்து நம்பர் ஒன் இடம் மாறியது.

- Advertisement -

ஐசிசி மன்னிப்பு:
அதனால் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் ஒரே நேரத்தில் முதலிடம் பிடித்த முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனை படைத்தது. மேலும் ஒரே நேரத்தில் 3 வகையான ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த அணி என்ற தென்னாபிரிக்காவின் உலக சாதனையும் இந்தியா சமன் செய்தது. அதனால் வழக்கம் போல அந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரவியதால் இந்தியாவின் உலக சாதனையை இந்திய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

ஆனால் மாலை 6 மணி அளவில் மீண்டும் ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இந்தியா 115 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் இருந்ததாக அதே ஐசிசி இணையத்தில் காண்பிக்கப்பட்டது இந்திய ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த குளறுபடி நடந்துள்ளதாக தெளிவுபடுத்தியுள்ள ஐசிசி இந்த தவறுக்காக ஆஸ்திரேலியாவிடம் மன்னிப்பு கேட்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது பற்றி ஐசிசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியது பின்வருமாறு.

- Advertisement -

“பிப்ரவரி 15, 2023 அன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐசிசி இணையத்தில் இந்தியா நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தவறாக காட்டப்பட்டதை ஐசிசி ஒப்புக்கொள்கிறது. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கும் குழப்பத்திற்கும் நாங்கள் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இருப்பினும் இம்முறை தப்பினாலும் டெல்லியில் நடைபெறும் அடுத்த போட்டியில் இந்தியா வென்றாலே முதலிடம் பிடிப்பதற்கு மீண்டும் அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: வீடியோ : தரமான ரூட்டை சொதப்பல் வீரராக மாற்றிய ஸ்டோக்ஸ் – மெக்கல்லம், டெஸ்ட் கிரிக்கெட்டை அழிப்பதாக திட்டும் ரசிகர்கள்

அதிலும் இந்தூரில் நடைபெறும் 3வது போட்டியில் வென்றால் நிச்சயாமாக இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக மீண்டும் முன்னேறுவதை ஐசிசி கூட தடுக்க முடியாது. எனவே இப்போது வேண்டுமானால் ஆஸ்திரேலியா தப்பியிருக்கலாம் ஆனால் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் முடியும் போது இந்தியா தான் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருக்கும் என்று இந்திய ரசிகர்கள் உறுதியான நம்பிக்கை வெளிப்படுத்துகிறார்கள். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 17ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி காண்பதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement