வீடியோ : தரமான ரூட்டை சொதப்பல் வீரராக மாற்றிய ஸ்டோக்ஸ் – மெக்கல்லம், டெஸ்ட் கிரிக்கெட்டை அழிப்பதாக திட்டும் ரசிகர்கள்

- Advertisement -

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷி ஃபைனல் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட இவ்விரு அணிகளும் தங்களது பலத்தை சோதிப்பதற்காக களமிறங்கிய இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 16ஆம் தேதியன்று மவுண்ட் மவுங்கனி நகரில் பகலிரவு போட்டியாக துவங்கியது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வழக்கம் போல அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி 325/9 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே தங்களது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

அதிகபட்சமாக பென் டூக்கெட் 84 (68), ஹரி ப்ரூக் 89 (81) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக நெயில் வேக்னர் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 1, கேன் வில்லியம்சன் 6, ஹென்றி நிக்கோலஸ் 4 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த இங்கிலாந்து மிரட்டல் தொடக்கத்தை பெற்றது. அதனால் முதல் நாள் முடிவில் 37/3 என்ற நிலையுடன் தடுமாறும் நியூசிலாந்துக்கு களத்தில் டேவோன் கான்வே 17*, நெய்ல் வாக்னர் 4* ரன்களுடன் இருக்கும் நிலையில் இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

- Advertisement -

சொதப்பிய ரூட்:
முன்னதாக ஜோ ரூட் தலைமையில் 2021இல் தொடர் தோல்விகளை சந்தித்த இங்கிலாந்துக்கு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக இதே நியூசிலாந்து மண்ணில் பிறந்த பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களது தலைமையில் என்ன ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ட்ரா என்ற பேச்சுக்கு இடமில்லாமல் டி20 போல அதிரடியாக விளையாடுவோம் என்ற அணுகுமுறையை பின்பற்றி இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து கடைசி 10 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்து வீரநடை போட்டு வருகிறது.

அதனால் நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி அதில் எப்படி விளையாட வேண்டும் என்பதை இங்கிலாந்து உலகிற்கே கற்றுக் கொடுத்து வருவதாக அந்நாட்டவர்கள் பெருமை பேசி வருகிறார்கள். இது அனைவராலும் வரவேற்கப்பட்டாலும் பொறுமையுடன் விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடுவது சிலருக்கு பிடிக்காததாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

அதற்கு பேசாமல் டி20 போட்டிகளில் விளையாடி விடலாமே என்று சொல்லும் ரசிகர்கள் இங்கிலாந்து இந்த அணுகு முறையில் சொதப்பும் போதெல்லாம் கலாய்த்து வருகிறார்கள். அந்த நிலையில் இப்போட்டியில் நெய்ல் வாக்னர் வீசிய 23வது ஓவரின் 4வது பந்தை இங்கிலாந்து நம்பிக்கை நட்சத்திரம் ஜோர் ரூட் திடீரென்று திரும்பி ரிவர்ஸ் ஸ்கூப் அடித்து பவுண்டரியாக பறக்க விட்டார்.

அது வர்ணனையாளர்கள் மற்றும் ரசிகர்களை வியக்க வைத்த நிலையில் மீண்டும் அவர் வீசிய 28வது ஓவரின் 2வது பந்தில் மீண்டும் அதே போல் அடிக்க முயற்சித்த ஜோ ரூட் 2வது ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்து பரிதாபமாக அவுட்டானார். இதை பார்க்கும் ரசிகர்கள் அனைத்து நேரங்களிலும் அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற ஷாட்டை வெற்றிகரமாக அடிக்க முடியாது என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் ப்ரண்டன் மெக்கல்லம் – ஸ்டோக்ஸ் ஆகியோர் தான் இதற்கு முக்கிய காரணம் என்று ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே 10000 ரன்களை அடித்து உலகத்தரம் வாய்ந்த டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்படும் ஜோ ரூட் கடந்த சில வருடங்களுக்கு முன் இது போன்ற ஷாட்களை அடிப்பதை பார்க்கவே முடியாது. ஆனால் அதிரடியான அணுகுமுறை என்ற பெயரில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்கை மாற்றி இது போல் அவுட்டாகும் அளவுக்கு ஜோ ரூட்டுக்கு பயிற்சி கொடுத்த நீங்கள் தான் இதற்கு காரணம் என்று ரசிகர்கள் ப்ரெண்டன் மெக்கல்லமை திட்டுகிறார்கள்.

இதையும் படிங்க:NZ vs ENG : 58 ஓவரில் நியூஸிலாந்தை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து – 46 வருடத்துக்கு பின் வித்யாசமான முடிவால் மிரட்டல்

மேலும் ஐபிஎல் தொடரால் டெஸ்ட் கிரிக்கெட் அழிகிறது என்று விமர்சிக்கும் இங்கிலாந்தினர் தான் தற்போது பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி அதன் அடிப்படைகளை மாற்றி அழிவுக்கு வித்திட்டு வருவதாக இந்திய ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Advertisement