ஐபிஎல் 2023 ஏலத்துக்கு பின் சிஎஸ்கே அணியின் பலமான உத்தேச ப்ளேயிங் லெவன் இதோ

CSK
- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்ற முடிந்துள்ளது. அந்த ஏலத்தில் தங்களுக்கு தேவையான கிரிக்கெட் வீரர்களை வாங்கி அணியை முழுமைப்படுத்தியுள்ள 10 அணிகளுக்கு மத்தியில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக விரைவில் தோனி ஓய்வு பெறும் நிலையில் கேப்டன்ஷிப் அனுபவம் வாய்ந்த உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி என்ற தகுதியான விலைக்கு வாங்கிய அந்த அணி நிர்வாகம் ஏற்கனவே ஓய்வு பெற்ற ட்வயன் ப்ராவோ இடத்தையும் பூர்த்தி செய்துள்ளது.

Ben-Stokes

- Advertisement -

அப்படி ஒரே கல்லில் 2 மாங்காய் கிடைத்த நிலையில் நியூசிலாந்தின் கெய்ல் ஜமிசனை வெறும் 1 கோடிக்கு வாங்கியதும் சிறந்த முடிவாகும். மொத்தத்தில் இந்த ஏலத்தில் முழுமையான 25 வீரர்களை வாங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 2020 போலவே 2022இல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு 2021 சீசனில் கோப்பையை வென்றது போல் 2023இல் 5வது கோப்பையை வென்று சரித்திரம் படைக்க தயாராகியுள்ளது. இந்த நிலையில் ஏலத்துக்கு பின் அந்த அணியின் சிறந்த 11 வீரர்கள் கொண்ட உத்தேச அணியை பற்றி பார்ப்போம்.

ஓப்பனிங்: முதல் தொடக்க வீரராக சந்தேகமின்றி 2021இல் ஸ்பார்க்கை காட்டி ஆரஞ்சு தொப்பியை வென்று 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய ருதுராஜ் கைக்வாட் களமிறங்குவார். மேலும் சமீபத்திய விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்க விட்டு உலக சாதனை அவர் சிறந்த பார்மிலும் உள்ளார்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

அவருடன் கடந்த வருடம் கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் டேவோன் கான்வே ஓப்பனிங் ஜோடியாக களமிறங்குவார். ஏனெனில் அவருக்கு பதிலாக சிவம் துபே, ராபின் உத்தப்பா போன்றவர்களை சோதித்த சென்னைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

- Advertisement -

மிடில் ஆர்டர்: 3வது இடத்தில் ரெய்னாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்று நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்துள்ள இங்கிலாந்தின் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மொயின் அலி தகுதியானவர். 4வது இடத்தில் வழக்கம் போல அனுபவமிக்க அம்பத்தி ராயுடு விளையாடுவார்.

jadeja 1

5 மற்றும் 6 ஆகிய இடங்களில் உலகில் தற்சமயத்தில் மிகச்சிறந்த வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஜொலிக்கும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சூழ்நிலைக்கேற்றார் போல் களமிறங்குவார்கள் என்று உறுதியாக நம்பலாம். அப்படி டாப் 6 பேட்ஸ்மேன்களில் 3 பேர் ஆல் ரவுண்டர்களாக இருப்பது சென்னைக்கு வரப்பிரசாதமாகும்.

- Advertisement -

இதில் 6வது இடத்தில் ஜடேஜா பினிஷராகவும் களமிறங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் 7வது இடத்தில் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக களமிறங்கும் தோனி சமீப காலங்களில் பினிஷிங் செய்ய தடுமாறுகிறார். இருப்பினும் 2022 சீசனில் பார்முக்கு திரும்பி ஒரு சில போட்டிகளை வெற்றிகரமாக முடித்த அவர் அடுத்த வருடமும் தன்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்.

Mukesh Chowdry

பந்து வீச்சு: வேகப்பந்து வீச்சு துறையில் 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹார் லோயர் ஆர்டரில் கணிசமாக அதிரடியாக ரன்களை குவிப்பவராக இருப்பதால் 8வது இடத்தில் களமிறங்க தகுதியானவர். அவருடன் கடந்த சீசனில் மிரட்டிய இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி களமிறங்குவார்.

- Advertisement -

அதே போல் கடந்த வருடம் தோனியின் பாராட்டைப் பெற்ற மற்றொரு இளம் வீரர் சிம்ர்ஜித் சிங் 3வது வேகப்பந்து வீச்சாளராக இடம் பெறுவார். அவர் தடுமாறும் ஓவர்களை பென் ஸ்டோக்ஸ் பார்த்துக் கொள்வார். ஸ்பின்னர் கடந்த வருடம் அசத்திய இலங்கையின் மஹீஸ் தீக்சனா விளையாடுவார்.

CSK MS Dhoni Ravindra Jadeja

இதையும் படிங்க:எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலையே இல்ல. டீம் தான் முக்கியம் – ரிஷப் பண்ட் அதிரடி

சென்னையின் உத்தேச 11 பேர் அணி இதோ: ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் – கீப்பர்), தீபக் சஹார், சிமர்ஜித் சிங், முகேஷ் சௌத்ரி மகீஷ் தீக்ஷனா (* – வெளிநாட்டு வீரர்கள்)

Advertisement