- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதெப்படி கடைசி நேரத்தில் சுப்மன் கில்லுக்கு இப்படி ஆச்சுன்னு தெரியல – கிண்டல் செய்த சீக்கா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்டு வருகிறார். மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வரும் அவருக்கு இந்திய அணியின் நிர்வாகமும் பெரிய அளவில் ஆதரவை வழங்கியுள்ளது. அந்த வகையில் டெஸ்ட் அணியிலும் தற்போது நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார்.

சுப்மன் கில் ஏன் விளையாடவில்லை :

கடந்த பல ஆண்டுகளாகவே அந்த இடத்தில் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய புஜாரா பார்ம் அவுட் காரணமாக நீக்கப்பட்டு தற்போது அந்த இடத்தில் சுப்மன் கில் விளையாடி வருகிறார். என்னதான் திறமை வாய்ந்த வீரராக சுப்மன் கில் இருந்தாலும் மூன்றாவது இடத்தில் இன்னும் அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடி வருகிறார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் தடுமாறி அவர் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதன் காரணமாகவே அவருக்கு இந்திய அணி மூன்றாவது இடத்தை வழங்கியது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இந்திய அணிலும் இடம் பிடித்துள்ளார். தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்த போட்டிக்கு முன்னதாக ஏற்பட்ட கழுத்து வலி காரணமாக அவதிப்பட்ட அவர் அணி நிர்வாகத்திடம் தான் கழுத்து பகுதியில் வலியை உணருவதால் முதல் போட்டியில் விளையாடவில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடாதது குறித்து தமிழக முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது பாணியில் சுப்மன் கில்லை கிண்டல் செய்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய வீரர்கள் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள் என்றால் மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளங்களை பார்த்தாலே பேட்ஸ்மேன்களுக்கு கழுத்து வலி வந்து விடுகிறது. அது எப்படி நேற்று வரை நன்றாக இருந்த சுப்மன் கில் இந்த ஆடுகளத்தை பார்த்தவுடன் கழுத்து வலி ஏற்பட்டதாக கூறுகிறார் என்று புரியவில்லை என தனது பாணியில் கிண்டல் அடித்தார்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக ரச்சின் ரவீந்திரா சதமடிக்க சி.எஸ்.கே செய்த உதவி தான் காரணம் – விவரம் இதோ

சுப்மன் கில் கடைசி நேரத்தில் விலகியதால் அணியின் பேலன்ஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய சர்ஃபராஸ் கான் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனார். அதேபோன்று அவரது இடத்தில் மூன்றாவது வீரராக களம் இறங்கிய விராட் கோலியும் டக் அவுட்டாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -