இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில் இரண்டாம் நாளில் இருந்து போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ரச்சின் ரவீந்திரா சதமடிக்க சி.எஸ்.கே செய்த உதவி :
அதனைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியானது 402 ரன்கள் குவித்து அசத்தியது. இதன் மூலம் 356 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணியானது :
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை எழுந்து 231 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக 125 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது நியூசிலாந்து அணி சார்பாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா 157 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 134 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு சிஎஸ்கே அணியின் நிர்வாகம் வழங்கிய உதவிதான் காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை வைத்துள்ளது. அந்த வகையில் :
இந்த இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாகவே இந்தியா வந்தடைந்த ரச்சின் ரவீந்திரா இந்திய ஆடுகளங்களின் சூழலை புரிந்து கொண்டு விளையாடுவதற்காக சிஎஸ்கே அணியின் நிர்வாகத்திடம் தனக்கு ஒரு பயிற்சி மைதானத்தை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வகையில் சிஎஸ்கே அணியும் அவருக்கு ஒரு பயிற்சி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுத்து அவருக்கு உதவி இருந்தது.
இதையும் படிங்க : 356 ரன்ஸ்.. நியூஸிலாந்து 3வது உலக சாதனை லீட்.. இந்தியாவுக்கு எதிராக திரும்பும் இயற்கை.. ரசிகர்கள் கவலை
அப்படி சென்னைக்கு இந்த தொடருக்கு முன்பாகவே வந்து எடுத்துக்கொண்ட பயிற்சி தான் தற்போது பெங்களூரு மைதானத்தில் அவருக்கு கை கொடுத்துள்ளது. இந்திய மைதானங்களின் சூழ்நிலையை கணித்து விளையாடுவதற்காகவே முன்கூட்டியே இங்கு வந்து அவர் சிஎஸ்கே அணியின் உதவியின் மூலம் பயிற்சி பெற்று தற்போது இந்திய அணிக்கு எதிராக அசத்தலான சதத்தையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



